கேரளா: குழந்தை பிறந்து 24 மணிநேரம் அதாவது மசூதியில் ஐந்து முறை தொழுகை முடியும்வரை குழந்தைக்கு தாய்ப்பால் தரக்கூடாது என்று தடுத்த கணவர்மீது வழக்கு தொடர மருத்துவமனை முடிவு செய்திருக்கிறது.

supersition

கேரளாவின் கோழிக்கோடு மாவட்டம் குக்கம் என்ற இடத்தில் உள்ள இ.எம்.எஸ் மருத்துவமனையில் ஹஃப்சத் என்ற ஒரு பெண்ணிற்கு குழந்தை பிறந்துள்ளது. அவருக்கு தாய்ப்பால் கொடுக்க ஹஃப்சத்திடம் சொன்னபோது அவர் தனது கணவர் 5 முறை மசூதியில் தொழுது முடியும்வரை தாய்ப்பால் கொடுக்கக்கூடாது என்று சொன்னதாக கூறியுள்ளார்.
மருத்துவமனை ஊழியர்கள் இது குறித்து ஹஃப்சத்தின் கணவர் அபுபக்கரிடம் கேட்டபோது இது தான் பின்பற்றும் இஸ்லாமிய மதகுரு ஹிட்ரோஸ் கோயா தங்கல் என்பவரின் ஆலோசனை என்றும். தான் அவர் சொன்னபடிதான் செய்வேன் என்றும் அடம் பிடித்திருக்கிறார். 24 மணி நேரம் வரை குழந்தைக்கு தாய்ப்பால் தராமல் இருப்பது குழந்தையின் உயிருக்கே ஆபத்தாக முடியும் என்று மருத்துவமனை கடுமையாக எச்சரித்தும் அபுபக்கர் மனம் மாறவேயில்லை. அதுவரை குழந்தைக்கு ஒன்றும் ஆகாது அப்படியே குழந்தை இறந்தாலும் அதற்கு நான் பொறுப்பேற்றுக்கொள்கிறேன்.
தனது குரு சொன்னபடி குழந்தைக்கு மெக்காவிலிருந்து கொண்டுவரப்பட்ட தண்ணீரும், சீனித்தண்ணீரும் வேண்டுமானால் கொடுக்கட்டும் அனால் 24 மணிநேரம் முடியும்வரை தாய்ப்பால் கொடுக்கக்கூடாது என்று அபுபக்கர் அடம்பிடிக்க கடுப்பான நிர்வாகம் போலீசை அழைத்திருக்கிறது. போலீசார் வந்து பேசியும் என்று சொல்லியும் அபுபக்கர் பணியவில்லை. அதுமட்டுமன்றி அதுவரை தொப்புள் கொடியிலிருக்கும் உணவு குழந்தைக்கு சென்றுவிடும் என்று டாக்டர்களுக்கே பாடம் எடுத்திருக்கிறார்.
கடைசியில் மமருத்துவமனை ஊழியர்களை தனது பணியை செய்யவிடாமல் தடுத்ததாக அவர்மீது வழக்கு தொடர மருத்துவமனை முடிவு செய்துள்ளது. போலீசார் சென்றபின்னர் வலுக்கட்டாயமாக தனது மனைவியை டிஸ்சார்ஜ் செய்து அழைத்துச் சென்றுள்ளார். அதற்குப்பின்னர் பலமுறை மருத்துவமனை அவரை தொடர்புகொண்டும் அவர் போனை எடுக்கவில்லை. அக்குழந்தைக்கு என்னவானது, தாயும் சேயும் எப்படி இருக்கிறார்கள் என்று தெரியவில்லை என்று மருத்துவமனை நிர்வாகம் கவலை தெரிவித்துள்ளது.