வெளிநாட்டு வாழ் கேரளத்தினர்  ஊர் திரும்பப் போட்டிப் போட்டு மனு..

கேரள மாநிலத்தைச் சேர்ந்த 33 லட்சம் பேர்  வெளிநாடுகளில், உள்ளனர்..

கொரோனா பீதியால் அவர்களில் பெரும்பாலானோர் ,மீண்டும் சொந்த ஊருக்குத் திரும்ப முடிவு செய்துள்ளனர்.

உலகம் முழுவதும் ஊரடங்கு அமலில் இருப்பதால்,   அனைத்து நாடுகளும் விமான போக்குவரத்தை ரத்து செய்து விட்டன.

இந்தியாவில் மே மாதம் 3 ஆம் தேதி ஊரடங்கு முடிய இருப்பதால் அதன் பிறகு விமானங்கள் இயக்கப்படும் என்று எதிர்பார்க்கப்படுகிறது.  .

’இந்த நிலையில்-

வெளிநாட்டில் வசிக்கும் கேரள மக்களின் விவகாரங்களைக் கவனிக்கும் ’’நோர்கா’’ அலுவலகத்தில்,பல்வேறு  நாடுகளைச் சேர்ந்த  கேரள மக்கள், ஊர் திரும்புவதற்காக, ஆன்லைனில்  முன்பதிவு செய்து வருகிறார்கள்..

இதற்கான முன்பதிவு கடந்த ஞாயிற்றுக்கிழமை மாலை 6 மணிக்குத் தொடங்கியது.நேற்று (செவ்வாய்க்கிழமை) மாலை வரை கேரளா வருவதற்கு 2  லட்சத்து  76 ஆயிரத்து 700 பேர் ‘’நோர்கா’’வில் முன்பதிவு செய்துள்ளனர்.

இவர்கள், உலகின் 150 நாடுகளில் வசிப்போர் ஆவர்.

இந்த எண்ணிக்கை 5 லட்சத்தைத் தாண்டக்கூடும் என்று எதிர்பார்க்கப்படுகிறது.-

இவர்களை வரவேற்கக் கொச்சி உள்ளிட்ட விமான நிலையங்கள் இப்போதே தயாராகி வருகின்றன.

– ஏழுமலை வெங்கடேசன்