கைது செய்யப்பட்ட பிஷப் பிராங்கோவுக்கு நெஞ்சு வலியாம்: மருத்துவமனையில் அனுமதி

--

கொச்சி:

ன்னியாஸ்திரி பாலியல் வன்கொடுமை தொடர்பான  புகாரில் நேற்று கைது செய்யப்பட்ட பிஷப்  பிராங்கோ முல்லக்கலுக்கு திடீர் நெஞ்சு வலி ஏற்பட்டதாகவும், அதன் காரணமாக அவரை காவல்துறையினர் மருத்துவமனையில் அனுமதித்து இருப்பதாகவும் கூறப்படுகிறது.

குற்றச்சாட்டுகளுக்கு ஆளாகும் அரசியல்வாதிகள், பிரபலங்கள் நெஞ்சுவலி என காரணம் கூறி மருத்துவமனைக்கு சென்று அடைக்கலம் தேடி வரும் நிலையில், தற்போது பாலியல் குற்றச்சாட்டுக்கு ஆளான கேரள கத்தோலிக்க முன்னாள் பிஷப் பிராங்கோவும் நெஞ்சு வலி என கூறி மருத்துவமனைக்கு சென்று படுத்துக்கொண்டார்.

கேரள மாநிலம் கோட்டயத்தை சேர்ந்த கன்னியாஸ்திரி ஒருவர், பஞ்சாப் மாநிலம் ஜலந்தர் மறை மாவட்ட கத்தோலிக்க திருச்சபையின் பிஷப்பாக இருந்த பிராங்கோ முல்லக்கல் மீது பாலியல் புகார் கூறினார்.  கடந்த 2014 முதல் 2016ம் ஆண்டு வரை பல முறை தன்னை பாலியல் வன்புணர்வு செய்தார் என்று கன்னியாஸ்திரி புகார் கொடுத்திருந்தார். இந்த புகாரின் மீது தொடக்கத்தில்  காவல்துறையினர்  நடவடிக்கை எடுக்காததால், மாநிலம் முழுவதும் கன்னியாஸ்திரிகள் போராட்டம் நடத்தினர்.

இதைத்தொடர்ந்து  பிராங்கோ முல்லக்கல் பிஷப் பொறுப்பில் இருந்து தற்காலிகமாக விடுவிக்கப்படுகிறார் என வாடிகன் சபை அறிவித்தது.

இந்த நிலையில் கடந்த 3 நாட்களாக காவல்துறை விசாரணைக்காக வைக்கம் துணை போலீஸ் சூப்பிரண்டு அலுவலகத்தில் ஆஜரான அவரிடம் போலீஸ் உயரதிகாரிகள் தீவிர விசாரணை நடத்தினர். விசாரணை முடிவில் அவரை கொச்சி போலீசார் கைது செய்தனர்.

இந்நிலையில், எர்னாகுளாத்தில் கைது செய்யப்பட்ட அவர், கோட்டயம் காவல் நிலையத்திற்கு அழைத்து செல்லப்பட்டார். செல்லும் வழியில் பிராங்கோ முல்லக்கல் தனக்கு திடீரென நெஞ்சு வலிப்பதாக போலீசாரிம் கூறியுள்ளார்.

இதைத்தொடர்ந்து, எட்டுமானூரில் உள்ள மருத்துவக்கல்லூரி மருத்துவமனைக்கு அவரை போலீசார் அழைத்து சென்றனர்.

அங்கு அவருக்கு ஈ.சி.ஜி உள்ளிட்ட பரிசோதனைகள் செய்யப்பட்டு சிகிச்சை அளிக்கப்பட்டு வருவதாக போலீசார் தெரிவித்தனர்.

You may have missed