பாலியல் பாதிரியார் பிராங்கோவுக்கு எதிராக சாட்சி சொன்ன மற்றொரு பாதிரியார் மர்ம மரணம்

ஜலந்தர்:

கேரளாவில் கன்னியாஸ்திரியை பலமுறை  பாலியல் வன்முறை செய்தி முன்னாள் பாதிரியார் பிராங்கோ வுக்கு எதிராக சாட்சி சொன்ன மற்றொரு பாதிரியாரான குரியகோஷ் கட்டுதாரா என்பவர்  மர்மமான முறையில் ஜலந்தரில் மரணம் அடைந்துள்ளார். இது பரபரப்பை ஏற்படுத்தி உள்ளது.

பாதிரியார் பிராங்கோ –                                                           பாதிரியார் குரியகோஷ் கட்டுதாரா

கேரள கன்னியாஸ்திரி பாலியல் வன்கொடுமை செயப்பட்ட விவகாரத்தில் பிராங்கோவுக்கு எதிராக,  முக்கிய சாட்சியான பாதிரியார் குரியகோஸ்  இன்று காலை சடலமாக மீட்கப்பட்டுள்ளார்.

சமீபத்தில் கேரள உயர்நீதி மன்றம் பாதிரியார் பிராங்கோவுக்கு ஜாமின் வழங்கிய நிலையில், அவர் தனது சொந்த ஊரான ஜலந்தருக்கு சென்றார். அவருக்கு அங்கு வெகு விமரிசையாக வரவேற்பு கொடுக்கப்பட்டது. இது சமூக வலைதளங்களில் கடுமையாக விமர்சிக்கப்பட்டு வந்த நிலையில், முக்கிய சாட்சியான பாதர் குரியேகோஷ் மர்மமான முறையில் மரணமடைந்துள்ளதுள்ளார். இது மேலும் சலசலப்பை ஏற்படுத்தி உள்ளது.

கேரள மாநிலம் கோட்டயம், குருவிலங்காட்டைச் சேர்ந்த கன்னியாஸ்திரி ஒருவர் ஜலந்தர் பி‌ஷப் பிராங்கோ முல்லக்கல் மீது பாலியல் புகார் கொடுத்தார். கடந்த 2014 முதல் 2016ம் ஆண்டு வரை பல முறை தன்னை 13 முறை  வன்புணர்வு செய்தார் என்று கன்னியாஸ்திரி புகார் கொடுத்திருந்தார். இது தொடர்பாக கேரள மாநில காவல்துறை அவர்மீது விசாரணை நடத்தி கைது செய்து சிறையில் அடைத்தது.

இந்த புகாரின்போது, பிஷப் பிராங்கோவுக்கு எதிராக ஜலந்தரை சேர்ந்த பாதிரியார் குரியகோஷ் கட்டுதாரா சாட்சி தெரிவித்திருந்தார். அவரது சாட்சி முக்கியமானதாக கருதப்பட்டது.

இதற்கிடையில் சிறையில் இருந்து தன்னை ஜாமினில் விடுவிக்க வேண்டும் என்று கேரள உயர்நீதி மன்றத்தில் பிராங்கோ தரப்பில்  மனு தாக்கல் செய்யப்பட்டது. அந்த மனுவை 2 முறை தள்ளுபடி செய்த நிலையில், இறுதியில் ஜாமின் வழங்கியது.

அப்போது, பிஷப் பிராங்கோ,  தனது பாஸ்போர்ட்டை நீதிமன்றத்தில் ஒப்படைக்க வேண்டும்  என்றும், இரண்டு வாரங்களுக்கு ஒருமுறை விசாரணை அதிகாரிக்கு முன்பாக ஆஜராக வேண்டும் என்றும்,  கேரளாவில் நுழைவதற்கும் அவருக்கு  தடை விதித்தது.

அதைத்தொடர்ந்து ஜாமினில் வெளியான பிராங்கோ, தனது சொந்த ஊரான ஜலந்தருக்கு சென்றார். அங்கு அவருக்கு வெகு விமரிசையான வரவேற்பு கொடுக்கப்பட்டது. இந்த நிலையில் பாதிரியார் குரியகோஷ் கட்டுதாரா இன்று காலை அவரது போக்பூர் இல்லத்தில் இருந்து சடலமாக மீட்கப்பட்டுள்ளார்.  இது பரபரப்பை ஏற்படுத்தி உள்ளது.

இவர் ஜலந்தர் மறைமாவட்ட திருச்சபையின் கீழ் பணியாற்றி வந்தது குறிப்பிடத்தக்கது.

ஏற்கனவே பிராங்கோவுக்கு எதிராக சாட்சி கூறியதால்,  தன்னுடைய உயிருக்கு ஆபத்து இருப்பதாக குரியகோஸ் கூறிவந்த நிலையில், அவர் மர்மமான முறையில் மரணம் அடைந்திருப்பதில்  பெரிய சதி இருப்பதாக குடும்பத்தினர் குற்றம் சாட்டியுள்ளனர்.

எனினும், பிரேத பரிசோதனை முடிந்த பின்னரே அவர் இறந்ததற்கான காரணம் தெரியும் என போக்பூர் போலீசார் கூறியுள்ளனர். பாதிரியார் குரியகோஸின் மரணம் இந்த வழக்கில் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது.