கொரொனா வைரசுக்கு நர்ஸ் எழுதிய ’மிரட்டல் கடிதம்’.

இன்னும் ஒரு வாரத்தில் உன்னை விரட்டுகிறேன்’’ என கொரோனா கூட்டத்துக்கு நர்ஸ் ஒருவர் கடிதம் எழுதியுள்ளார்.

கேரள மாநிலம் கோட்டயத்தில் உள்ள அரசு மருத்துவமனையில் நர்சாக பணிபுரியும் ஒருவரை கொரோனா வைரஸ் தாக்கியுள்ளது.

தனிமைப்படுத்தப்பட்டு சிகிச்சை பெற்று வரும் அந்த நர்ஸ். வாட்ஸ் அப்பில் கொரோனாவுக்கு ஒரு கடிதம் அனுப்பியுள்ளார்.

கடித வாசகங்கள் இவை:

‘’ கேரளா வந்துள்ள அழையா விருந்தாளியே! கேரள மக்கள் குறித்தும், இங்குள்ள சுகாதார ஊழியர்கள் பற்றியும் உனக்கு தெரியாது.

தவறான இடத்துக்கு நீ வந்துள்ளாய்.

என் இனிய நண்பனே! இது கேரளா! இன்னும் ஒரு வாரத்தில் உன்னை இங்கிருந்து விரட்டுவோம். இந்த அறையில் இருந்து நீ வெளியேற்றப்படுவாய்’’ என்று அந்த கடிதத்தில் நர்ஸ் குறிப்பிட்டுள்ளார்.

கொரோனாவால் பாதிக்கப்பட்டு தனி அறையில் சிகிச்சை பெற்று வரும் அந்த நர்ஸ் உற்சாகமாக இருப்பதாக அவரது தோழிகள் தெரிவித்தனர்.

இதனிடையே அவருடன் தொடர்பில் இருந்த 20 நர்சுகளும் இப்போது, கண்காணிப்பில் வைக்கப்பட்டுள்ளனர்.