சரக்குக்கு மாற்று..  விளையாடும் கேரளா..

மதுக்கடைகள் மூடப்பட்டதால், நம்ம ஊர் குடிமகன்கள், எத்தனால், மெத்தனால், வார்னிஷ் என கண்ட அமிலங்களைக் குடித்து மாய்ந்து போகிறார்கள்.

கேரளாவல் உள்ளவர்களோ, நிதானமாக, மதுவுக்கு சரியான மாற்று எது என்று மாத்தி யோசித்து, ‘கண்டு பிடித்து’ விட்டார்கள் போல தெரிகிறது.

அந்த மாற்று மருந்துபெயர்-

’அரிஷ்டம்.’

சில நோய்களுக்கு டாக்டர்கள் பரிந்துரை செய்யும்,  ’அரிஷ்டம்’ உண்மையில் மருந்து தான்.

ஒரு டோஸ், அருந்தலாம்.

கேரளாவில் உள்ள ஆயுர்வேத மருந்துக் கடைகளில் இந்த மருந்து விற்பனை செய்யப்படுகிறது.

இதில் 10 % ஆல்ஹகால் கலந்து உள்ளது.

இந்த மருந்தை ஒரு பாட்டில் குடித்தால், போதை ‘உத்தரவாதம்’’ என்று எவனோ ஒரு அனுபவஸ்தன் கிளப்பிவிட, ஆயுர்வேத மருந்துக் கடைகளில் அரிஷ்டம் வாங்க இப்போது கூட்டம் அலை மோதுகிறது.

ஊரடங்கு அமலுக்கு வந்த பின், கேரளாவில் உள்ள ஆயுர்வேத கடைகளில் அரிஷ்டம் விற்பனை 30% அதிகரித்துள்ளது என்பதே இதற்குச் சாட்சி என்கின்றனர்..

கொரோனாவை சமாளிக்கவே போலீசார்,படாதபாடு படுவதால், குடிமகன்கள், பாட்டில்  பாட்டிலாக, அரிஷ்டத்தை வீட்டில் வாங்கி குவித்துள்ளனர்.

குறிப்பிட்ட அளவுக்கு மேல் வீட்டில் அரிஷ்டம் வைத்திருப்பது, கேரளாவில் சட்டப்படி குற்றமாகும்.

– ஏழுமலை வெங்கடேசன்