துயரத்தில் இருந்து மீளும் தைரியம் கேரள மக்களுக்கு உண்டு…..பினராய் விஜயன்

திருவனந்தபுரம்:

துயரத்தில் இருந்து மீளும் தைரியம் கேரள மக்களுக்கு உண்டு என்று முதல்வர் பினராய் விஜயன் தெரிவித்துள்ளார்.

இது குறித்து அவர் கூறுகையில், ‘‘கேரளா வெள்ள பாதிப்பில் பலியானோர் எண்ணிக்கை 357 ஆக உயர்ந்துள்ளது இன்று மட்டும் 33 பேர் உயிரிழந்துள்ளனர். எந்த மாநிலத்திலும் இல்லாத வகையில் கேரளாவில் பாதித்துள்ளது. தேவையுள்ள அனைவருக்கும் உதவி செய்யப்படும். வெள்ள பாதிப்பால் ஓணம் கொண்டாட்டம் ஒத்திவைக்கப்பட்டுள்ளது.

நிவாரணம் மற்றும் மீட்பு பணிகளை மேற்கொள்ள கலெக்டர் மற்றும் போலீஸ் அதிகாரிகளுக்கு உத்தரவிடப்பட்டுள்ளது. வெள்ளத்தால் போக்குவரத்து பாதித்துள்ளது. இதனால் நிவாரண பொருட்கள் கொண்டு செல்வதில் சிக்கல் ஏற்பட்டுள்ளது. துயரத்தில் இருந்து மீண்டு வரும் தைரியம் கேரள மக்களுக்கு உண்டு. மத்திய அரசு தரப்பில் போதிய உதவிகள் வழங்கப்பட்டுள்ளன’’ என்றார்.