ஈஸ்டர் உணவைச் சீரழித்த 8 பசுக்காப்பாளர்கள் கைது!

 

Kerala Police arrest 8 ‘Gau Rakshaks’ for spoiling meat, disrupting Easter celebrations

 

கேரளாவில் ஈஸ்டர் பண்டிகைக்காக தயாரிக்கப்பட்டிருந்த மாட்டிறைச்சி உணவை, வீடு புகுந்து எடுத்துக் கொண்டு போய் வெளியே வீசி எறிந்து அவமதித்த ஆர்எஸ்எஸ் இயக்கத்தைச் சேர்ந்த 8 பேரை காவல்துறையினர் கைது செய்துள்னளர்.

 

அலுவா பகுதியில் வசிக்கும் ஜோஸ் குடும்பத்தினர் ஈஸ்டர் பண்டிகையை ஒட்டி தமது வீட்டில் மாட்டிறைச்சி உணவை தயாரித்து வைத்துள்ளனர். இதையறிந்த அப்பகுதியில் உள்ள ஆர்எஸ்எஸ் இயக்கத்தினர், ஜோஸ் வீட்டுக்குள் கும்பலாக புகுந்து, பண்டிகைக்காக தயாரிக்கப்பட்டிருந்த உணவையும், சமைக்க தயாராக இருந்த இறைச்சியையும் எடுத்துக் கொண்டு போய் வெளியில் வீசி எறிந்துள்ளனர். மேலும் மாடுகளைக் கொல்லவோ, உணவாக சமைக்கவோ அனுமதிக்க மாட்டோம் என அந்தக் குடும்பத்தினரை மிரட்டிச் சென்றுள்ளனர். அவர்களுக்கு பயந்து, இந்தச் சம்பவம் குறித்து ஜோஸ் என்பவர் காவல்துறைக்கு தெரிவிக்காமல் இருந்துள்ளார். ஆனால், அந்த கிராமத்து பஞ்சாயத்துத் தலைவரான ஷிஜூ, ஆர்எஸ்எஸ் இயக்கத்தினரின் அத்துமீறல் குறித்து காவல்துறையில் புகார் அளித்துள்ளார்.

 

இந்தச் சம்பவம் குறித்து 14 பேர் மீது வழக்குப் பதிவு செய்துள்ள காவல்துறையினர், அவர்களில் 8 பேரைக் கைது செய்துள்ளனர்.

 

வடமாநிலங்களில் பசுக்காப்பாளர்கள் என்ற பெயரி்ல் மாட்டிறைச்சியை உணவுக்காகவும், வாழ்வாதாரத்திற்காகவும் பயன்படுத்துவோரை அடித்துக் கொல்லும் கலாச்சாரம் பரவி வருகிறது. இந்நிலையில், கேரளாவிலும் பசுக்காப்பாளர்கள் தங்களது அத்துமீறலைத் தொடங்கி உள்ளனர். தென்மாநிலங்களிலும் பசுக்காப்பாளர்கள் தங்களது கைவரிசையைக் காண்பிக்கத் தொடங்கி இருப்பதன் அடையாளமாகவே இந்தச் சம்பவம் பார்க்கப்படுகிறது.