Random image

பாலியல் புகார்…கேரளாவில் தலைமறைவு பாதிரியார் கைது

திருவனந்தபுரம்,:

கேரளா மலங்கரா மரபு வழி திருச்சபையில் பாவ மன்னிப்பு கேட்க வந்த ஒரு பெண்ணை மிரட்டி 4 பாதிரியார்கள் பாலியல் பலாத்காரம் செய்யப்பட்ட சம்பவம் குறித்து போலீசார் விசாரணை நடத்தி வருகின்றனர். இதனால் பாதிரியார்கள் தலைமறைவாயினர்.

4 பேருக்கும் முன்ஜாமீன் வழங்க கேரள உயர்நீதிமன்றம் மறுத்துவிட்டது. இந்த வழக்கில் 2வது குற்றவாளியாக சேர்க்கப்பட்டுள்ள பாதிரியார் ஜோப் மேத்யூ கொல்லம் குற்றப்பிரிவு போலீசில் சரணடைந்தார். அவரை போலீசார் கைது செய்தனர்.

3வது குற்றவாளியாக சேர்க்கப்பட்டுள்ள ஜான்சன் வி.மேத்யூவை பத்தினம் திட்டாவில் போலீசார் கைது செய்தனர். பின்னர் அவரை விசாரணைக்காக போலீசார் திருவல்லாவுக்கு கொண்டு சென்றனர். 2 பாதிரியார்கள் தொடர்ந்து தலைமறைவாக உள்ளனர். அவர்களை போலீசார் தீவிரமாக தேடி வருகின்றனர்.

You may have missed