சைக்கிளில் வந்தவரிடம் ஹெல்மெட் கேட்டு ரூ. 2 ஆயிரம் “அபராதம்” விதித்த போலீஸ்?

சைக்கிளில் சென்றவரிடம், ஹெல்மெட் அணியவில்லை என்று காவலர்கள் அபராதம் விதித்தாக சமூகவலைதளங்களில் ஒரு பதிவு பரவி அதிர்ச்சி அடைய வைத்திருக்கறது.

உத்தரப்பிரதேசத்தை சேர்ந்தவர் காசிம். இவர்,  கேரளாவில் தங்கி கூலி வேலை செய்து வருகிறார். இவர் கடந்த வாரம் கும்பாலா பகுதியில் இவர்  சைக்கிளில் சென்றபோது, கேரள காவல்துறையினர் அவரை வழிமறித்து சைக்கிளை வேகமாக ஓட்டி வந்ததற்காக அபராதம் கட்டுமாறு கூறியதாகவும், ஹெல்மெட் அணியவில்லை என்று கூறி சைக்கிள் டயரை பஞ்சர் செய்ததோடு,  ரூ.2,000 அபராதத்தை செலுத்தச் சொன்னதாக அந்த பதிவில் கூறப்பட்டுள்ளது. மேலும்,  பணத்தைப் பெற்றுக்கொண்ட காவல்துறையினர் ரூ.500 மட்டும் ரசீது எழுதி, அதில் இருசக்கர வாகன எண்ணைப் பதிவு செய்து கொடுத்ததாகவும் அந்த சமூகவலைதள பதிவில் குறிப்பிடப்பட்டுள்ளது.

இந்தப் பதிவு தற்போது சமூக வலைத்தளங்களில் வைரலாக பரவி வருகிறது.

தமிழ்த்திரைப்படம் ஒன்றில், தென் மாவட்டத்தில் இருந்து சென்னை வந்த வடிவேலுவிடம், பாஸ்போர்ட் கேட்டு காவல்துறையினர் “அபராதம்” விதிக்கும் காட்சி இடம்பெற்றிருக்கும். அதுபோல சைக்கிலுக்கு ஹெல்மெட் கேட்டு “அபராதம்” விதிக்கப்பட்டிருக்கிறது என்று பலரும் சமூகவலைதளங்களில் பதிவிட்டு வருகின்றார்கள்.