கேரள போலிஸ் எங்களை சபரிமலை ஏறவிடாமல் தடுத்தது : மனிதி தொண்டர் செல்வி

சென்னை

கேரள காவல்துறையினர் தங்கள் பயணத்தகவலை வெளியிட்டு தங்களை சபரிமலை ஏற விடாமல் தடுத்ததாக மனிதி அமைப்பின் செல்வி மனோ கூறி உள்ளார்.

மகளிர் உரிமை குழுவான மனிதி என்னும் அமைப்பை சேர்ந்த பெண்கள் சபரிமலை செல்ல திட்டமிட்டனர்.   பெண்களுக்கு சபரிமலை செல்ல உரிமை உள்ளது என்பதை நிலை நாட்ட தாங்கள் செல்ல உள்ளதாக அறிவித்தனர்.   ஆனால் அவர்களை பக்தர்கள் பம்பையில் தடுத்து நிறுத்தி போராட்டம் நடத்தியதால் அவர்களை கேரள காவல்துறையினர் தடுத்து திருப்பி அனுப்பி விட்டனர்.

இந்த சம்பவம் குறித்து பத்திரிகையாளரிடம்  இந்த குழுவை சேர்ந்த செல்வி மனோ என்பவர் தொலைபேசியில் பேட்டி அளித்துள்ளார்.

அந்த பேட்டியின் விவரம் வருமாறு.

”நாங்கள் பம்பைக்கு விடியற்காலையில் சென்றும் எங்களால் 9 மணி வரை சபரிமலை ஏற முடியவில்லை.    காவல்துறை நினைத்திருந்தால் எங்களை காலை 4 மணிக்கே அழைத்துச் சென்றிருக்கலாம்.   நாங்கள் எங்கள் சடங்குகளை 3.30 மணிக்கு முடித்த போது 30 போராட்டக்காரர்கள் இருப்பதாக காவல்துறையினர் தெரிவித்தனர்.

காவல்துறையால் 30 பேரை அடக்க முடியாதா?  வேண்டுமென்றே அவர்கள் எங்களை தமதபடுத்தி உள்ளன்ர்.   அங்கு  ஐயப்ப கோஷம் எழுப்பிய பக்தர்கள் யாரும் எங்களை தாக்கவில்லை.   ஆஅனால் காவல்துறை ஏதோ சிக்னல் கொடுக்கவே அவர்கள் எங்களை நோக்கி ஓடி வந்தனர்.   அதனால் நாங்கள் அங்கிருந்து திரும்பி வர நேரிட்டது.

எங்களது ஆதரவாளர்கள் எங்களை ரெயிலில் பயணம் செய்ய சொன்னதையும் கேரள காவல்துறையினர் எதிர்த்தனர்.   கோட்டயம் ரெயில் நிலையத்தில் எங்களை எதிர்த்து போராட்டம் நடக்கும் என அச்சம் தெரிவித்தனர்.   ஆனால் எங்கள் ரெயில் டிக்கட்டுகள் கன்ஃபார்ம் ஆகாததால் நாங்கள் பொதுப்பெட்டியில் பயணம் செய்தோம்.  இந்த தகவலை காவல்துறையினர் வெளியிட்டுள்ளனர்.

தமிழ்நாடு காவல்துறை எங்களுக்கு மதுரை வரையிலும்,  மதுரையில் இருந்து கேரள காவல்துறை  எங்களுக்கு பாதுகாப்பு அளிக்கும் எனவும்ம் அறிவிக்கப்பட்டது.   ஆனால் நாங்கள் பாதுகாப்பு என்னும் பெயரில் காவலில் இருந்தோம் என நான் சொல்லுவேன்.      எங்களின் குழுவில் இருந்து எங்களை கேரள காவல்துறை பிரித்தது.   அவர்கள் எங்களை தமிழ்நாட்டுக்கு திரும்ப அனுப்புவதிலேயே குறியாக இருந்தனர்.

நாங்கள் சென்ற வாகனத்துக்கு முன்பும் பின்பும் காவல்துறையினரின் மூன்று வாகனங்கல் பாதுகாப்புக்கு வந்தன.  ஆனால் அவர்கள் எங்கள் உரிமையை நிலை நாட்ட உதவுவதை விட எங்கள் உயிரைக் காப்பதே தஙக்ள் கடமை என கூறினார்கள்.   நாங்கள் இது குறித்து செய்தியாளர் சந்திப்பு நடத்தவும் முதல்வரை சந்திப்பதையும் அவர்கள் தடுத்ஹ்டனர்.

எங்களை உணவு அருந்தவோ சிறுநீர் கழிக்கவோ கேரள காவல்துறையினர் அனுமதிக்கவில்லை.   நாங்கள் எங்கள் உணவை எடுத்டு வந்திருக்க வேண்டும் எனக் கூறி அங்கு எங்களை உணவுப் பொருட்களை வாங்கவும் அவர்கள் தடை செய்தனர்.   குழுவில் உள்ளவர்களிடம் தனித்தனியே பேசியும் எங்கள் குழந்தைகள் புகைப்படத்தைக் காட்டியும் எங்களை திரும்பி செல்ல வேண்டும் என காவல்துறையினர் மூளைச்சலவை செய்தனர்.” என காவல்துறை நடவடிக்கை குறித்து  செல்வி தெரிவித்துள்ளார்.