அஜித்தின் ’கண்ணான கண்ணே’ பாடலை அசத்தலாக கிடார் மூலம் வாசிக்கும் கேரள காவலர்…  வைரல் வீடியோ

ஜித்தின் நடித்து மாபெரும் வெற்றி பெற்ற விஸ்வாசம் படத்தின்  ’கண்ணான கண்ணே’ பாடலை, கேரளாவின் கண்ணூர் மாவட்ட காவல்துறையைச் சேர்ந்த காவலர் ஒருவர்   அசத்தலராக கிடார் மூலம் வாசிக்கும் வீடியோ சமூக வலைதளங்களில் வைரலாகி வருகிறது… இது நெட்டிசன்களிடையே பெரும் வரவேற்பை பெற்றுள்ளது.

கடந்த 2019ம் ஆண்டி  சிறந்த மெலோடியாகவும், குழந்தைகளுக்கான தாலாட்டு பாடலாக புகழ்பெற்றது விஸ்வாசம் படத்தின் கண்ணான கண்ணே பாடல். அஜித் படங்களில் வெளியாகி உள்ள பாடல்களில்,  கண்ணான கண்ணே  பாடல்தான் முதல்முறையாக 100 மில்லியன் வியூஸ்களை கடந்து சாதனை படைத்தது.

சிறுத்தை சிவா இயக்கிய விஸ்வாசம் படத்தின் இந்த பாடலுக்கு இசையமைப்பாளர் இமான் இசையமைத்திருந்தார். இந்த பாடலை பாடலாசிரியர் தாமரை எழுத, பாடகர் சித்ஸ்ரீராம் பாடி பெரும் வரவேற்பையும், பெரும் வெற்றியை தல அஜித்துக்கு பெற்றுக்கொடுத்தது.

இந்த பாடலை கேரள மாநிலத்தைச் சேர்ந்த காவலர் ஒருவர் கிடார் மூலம் அழகாக வாசித்து,  விஸ்வாசத்துக்கு மேலும் சிறப்பை பெற்றுத்தந்துள்ளார்….