கேரளா: பாலியல் புகாரில் சிக்கிய 4 பாதிரியார்கள் மீது வழக்குப் பதிவு

திருவனந்தபுரம்:

கேரளாவில் பாலியல் பலாத்கார புகாரில் சிக்கிய 4 பாதிரியார்கள் மீது போலீசார் வழக்குப்பதிவு செய்துள்ளனர்.

கேரள மாநிலம் பத்தினம் திட்டாவைச் சேர்ந்த பெண் ஒருவர் திருமணத்துக்கு முந்தயை பாலின உறவு குறித்து தேவாலய பாதிரியாரிடம் பாவ மன்னிப்பு கோரினார். இந்த ரகசியத்தை அந்த பாதிரியார் சக பாதிரியார்கள் 3 பேரிடம் தெரிவித்தார்.

இந்த ரகசியத்தை கணவரிடம் கூறிவிடுவோம் என்று மிரட்டி அந்த பெண்ணை பாலியல் பலாத்காரம் செய்துள்ளனர். இது குறித்து அந்த பெண்ணின் கணவர் திருவனந்தபுரம் குற்றப்பிரிவு போலீசாரிடம் புகார் செய்தார். 4 பாதிரியார்கள் மீது போலீசார் வழக்குப் பதிவு செய்து விசாரணை மேற்கொண்டுள்ளனர்.