வெளிநாட்டு எண்ணில் இருந்து அழைப்பு: கேரள காவல்துறை எச்சரிக்கை

+4 அல்லது +5 என துவங்கும் புதிய எண்களில் இருந்து யாத வெளிநாட்டு எண்களில் இருந்து வரும் அழைப்புகளை ஏற்க வேண்டாம் என்றும், மிஸ்டுகால் வந்தால் திரும்ப அழைக்க வேண்டாம் என்றும் கேரள காவல்துறை மக்களுக்கு எச்சரிக்கை விடுத்துள்ளது.

கேரளாவில் ஏராளமான மக்கள் தங்கள் செல்போன்களுக்கு +4 மற்றும் +5 ஆகிய எண்களில் துவங்கும் வெளிநாட்டு எண்களில் இருந்து அழைப்புகள் வருவதாகவும், அவற்றை எடுக்கும் போது செல்போனில் உள்ள தகவல், பேலன்ஸ் ஆகியவை களவு போவதாகவும் தொடர்ந்து காவல்துறையில் புகார் அளித்துவருகின்றனர்.  இந்த எண்கள் பொலிவியா போன்ற நாடுகளைச் சேர்ந்தவை.

இந்தப் புகார்களை அடுத்து, உயர் தொழில்நுட்பங்களைக் கொண்டு செல்போன் கால்கள் மூலம் திருட்டுகளில் ஈடுபட  என்பது குறித்தும், ஏன் வெளிநாட்டு எண்களில் இருந்து கேரள மக்களுக்குக் அழைப்புகள் வருகின்றன என்பது குறித்தும் விசாரணை நடத்தப்பட்டு வருகின்றன.

இந்த நிலையில் விசாரணைகள் முடிந்து, காரணங்கள் கண்டறியப்படும் வரையில் இதுபோன்ற கால்களை ஏற்க  வேண்டாம் எனக் கேரள காவல்துறை மக்களுக்கு எச்சரிக்கை விடுத்து இருக்கிறது.  இந்த நிலையில், தற்போது கேரளாவுக்கு நடப்பது நாளை தமிழகத்துக்கும் நடக்கலாம் என்பதால் தமிழக மக்களும் எச்சரிக்கையுடன் இருக்க வேண்டும் என்கின்றனர் சமூக ஆர்வலர்கள்.