கேரளாவையும் விட்டு வைக்காத மதுவிலக்கு வாக்குறுதி

இடது ஜனநாயக முன்னணி தம்முடைய தேர்தல் அறிக்கையில் கேரளாவிற்கான மதுபான கொள்கை அறிவித்துள்ளது: மது அருந்த சட்டப்படி  வயது வரம்பு 23 ஆக உயர்த்தப்படும்.மக்களுக்கு விழிப்புணர்வு ஊட்டப்படும்.

kerala liquor ban promise 1

கேரளா: கடந்த செவ்வாய்க்கிழமையன்று  இடது ஜனநாயக முன்னணி வெளியிட்ட தனது தேர்தல் அறிக்கையில், மிகுந்த சிரத்தையோடு படிப்படியாக  கேரள மாநிலத்திலிருந்து மது ஒழிக்கப்படும் என வாக்குறுதி அளித்துள்ளது.

இடது ஜனநாயக முன்னணி அதன் கொள்கையை செயல்படுத்த முடிந்தால், மாநிலத்தில் சாராயம் அருந்த தகுதியடையவராக இருக்க ஒருவர் 23 ஆண்டுகள் காத்திருக்க வேண்டும். ஆனால், நிச்சயமாக மாநிலத்தில் கட்டுப்படுத்தப்பட்ட முறையில் மதுபானம் உபயோகம் இருக்கும், அதுவும் இடது ஜனநாயக முன்னணி மதுபானத்தை மொத்தமாகத் தடை செய்யும் மனோநிலையில் இல்லை.

இடது ஜனநாயக முன்னணி  ஆட்சிக்கு வந்தால், தீவிரமான பல பொது விழிப்புணர்வு முகாம்கள் ஏற்பாடு செய்து படிப்பறிவற்ற மக்களுக்கு சாராயத்தால் வரும் ஆபத்துக்களைப் பற்றிய விழிப்புணர்வை ஏற்படுத்தும் என்று வாக்குறுதி அளித்தது.

இடதுசாரிக் கூட்டணி, மாநிலத்தில் குடிகாரர்களைப் படிப்படியாக குறைப்பதற்காக தேவையான சட்டங்களின் உதவியுடன், மதுபானத்தின் விற்பனை மற்றும் உட்கொள்ளுதலைக் குறைக்க நடவடிக்கைகள் மேற்கொள்ளப்படும் என வாக்களித்துள்ளது.

மது மற்றும் போதையிலிருந்து விலகியிருக்க மக்களை ஊக்குவிக்கும் பொருட்டு பள்ளியிலிருந்தே பரவலான விழிப்புணர்வு  ஏற்படுத்தி ஒரு கல்வி சார்ந்த பரப்புரை வழங்க வேண்டும். கேரளா முழுவதும் மறுவாழ்வு மையங்கள் நிறுவி இது மேலும் வலுப்படுத்தப்படும்.

சி.பி.ஐ (எம்) இரட்டை நிலைப்பாடு:

தமிழகத்தில் யாராலும் தட்டிக்கழிக்க முடியாத முடியாத பிரச்சனையாக மதுபானப் பிரச்சனையை ஆக்கிய பெருமை தமிழகம் முழுவதும் போராடிய மக்களையே, குறிப்பாக இளைஞர்களையும் பெண்களையுமே சாரும். குறிப்பிடும்படியாக, நந்தினி எனும் மாணவி, மறைந்த  சசிபெருமாள், காந்தி மக்கள் இயக்கத் தலைவர் தமிழருவி மணியன், வைகோ,விஜயகாந்த், ராமதாஸ், திருமாவளவன் ஆகியோர் மதுவிலக்கு குறித்து விழிப்புணர்வு பிரச்சாரத்தில் தம்மை ஈடுபடுத்திகொண்டனர். தாங்கள் ஆட்சிக்கு வந்தால் பூரண மதுவிலக்கை அமல்படுத்தப்பபோவதாக ஏறக்குறைய அனைத்து அரசியல் கட்சிகளுமே வெவ்வேறு வார்த்தைகளில் சொல்லியிருக்கின்றன. சி.பி.ஐ (எம்)மும் இதையே சொல்லியிருக்கிறது. ஆனால் தமிழகத்தின் மேற்கிலுள்ள கேரளத்தில் பூரண மதுவிலக்கை தாங்கள் ஆதரிக்கவில்லை என அக்கட்சியின் தலைவர்கள் வெளிப்படையாகவே சொல்லிவிட்டனர். இவ்வாறு இரு வேறு நிலைப்பாடுகளை இக்கட்சி எடுத்திருப்பதைக் கண்டு தமிழ்நாட்டில் இக்கட்சி முற்போக்கானதாக இருப்பதாக சிலரும் கேரளாவில் இக்கட்சி நடைமுறை ரீதியாகவும் தர்க்க ரீதியாகவும் சிந்தித்து சரியான நிலைப்பாட்டை எடுத்திருப்பதாக வேறு சிலரும் கூறுகிறார்கள்.

“தமிழகத்தில் இப்போது பூரண மதுவிலக்கைப்பற்றி பேசவில்லை என்றால் ஓட்டு விழாது என்ற ஒரே காரணத்திற்காகவே  சி.பி.ஐ (எம்) மதுவிலக்கு கோரிக்கையும் கோஷமும் தேர்தல் சமயத்தில் முன்வைத்துள்ளது. எனவே, உண்மையில் உளப்பூர்வமாக பூரண மதுவிலக்கு என்ற கோஷத்தை சி.பி.ஐ (எம்) இங்கே முன்வைக்கிறாா்கள் என்று நம்புவதும் அறியாமையின் வெளிப்பாடேயாகும். இது அப்பட்டமாக் தேர்தலை மட்டுமே குறிவைத்து நடத்தப்படும் சந்தர்ப்பவாத தேர்தல் அரசியலேயன்றி வேறல்ல “என்கிறார்  சமுகப் போராளி சுமதி வெங்கடாச்சலம்.