தியேட்டரா? இணையமா? ஓட்டுப்போட்ட தயாரிப்பாளர்கள்..

தியேட்டரா? இணையமா? ஓட்டுப்போட்ட தயாரிப்பாளர்கள்..

தியேட்டர் அதிபர்கள் எதிர்ப்பை பொருட்படுத்தாமல், நடிகர் சூர்யா தனது தயாரிப்பில் உருவான ’பொன்மகள் வந்தாள்’ படத்தை இணைய தளத்தில் (ஓ.டி.டி.) ரிலீஸ் செய்து விட்டார்.

இதற்கு சில தயாரிப்பாளர்கள் ஆதரவு இருந்தது.

கேரளாவிலும் ‘ சுபியும் சுஜாதாயும்’’ என்ற மலையாள திரைப்படத்தை ஓ.டி.டி.யில். வெளியிடப்போவதாக அதன் தயாரிப்பாளர் அறிவித்தார்.

இதன் தொடர்ச்சியாக மேலும் சில மலையாளப்படங்கள் ஓ.டி.டி.யில் வெளியாகும் சூழல் உருவானது.

தியேட்டர்களை பகைத்துக்கொள்ள விரும்பாத , தயாரிப்பாளர்கள், ஒரு புதிய முடிவு எடுத்தனர்.

தங்கள் சங்க உறுப்பினர்களிடையே சினிமாவை முதலில் ரிலீஸ் செய்வது தியேட்டரிலா? அல்லது ஓ.டி.டி.யிலா? என ஓட்டெடுப்பு நடத்தி தீர்மானிக்க விரும்பினர்.

அதன்படி நேற்று தயாரிப்பாளர்கள் மத்தியில் ஓட்டெடுப்பு நடத்தப்பட்டது.

மொத்தம் 48 தயாரிப்பாளர்கள் ஓட்டெடுப்பில் கலந்து கொண்டனர்.

‘’ நேரடியாக ஓ.டி.டி.யில் ரிலீஸ் செய்யலாம்’’ என 3 தயாரிப்பாளர்கள் மட்டும் ஓட்டு அளித்தனர்.

எஞ்சிய தயாரிப்பாளர்கள், ‘’ எங்கள் முதல் சாய்ஸ் தியேட்டர்கள் தான். தியேட்டர்கள் திறக்கும் வரை நாங்கள் காத்திருக்க தயார்’’ என ஓட்டளித்துள்ளனர்.

இதனால் கேரள தியேட்டர் அதிபர்கள் மகிழ்ச்சியில் ஆழ்ந்துள்ளனர்.

You may have missed