கடையடைப்பு போராட்டங்களால் நஷ்டம் அதிகம்… 2019-ல் போராட்டம் இல்லாத கேரளா

கொச்சி: கேரளா 2019ஆம் ஆண்டை போராட்டம் இல்லாத ஆண்டாக அறிவித்துள்ளது.

கேரளாவில் இடதுசாரி இயக்கங்களின் ஆளுமை அதிகமிருப்பதால் வருடம்தோறும் ஆங்காங்கே போரட்டங்கள், முழு கடையடைப்பு நடந்துகொண்டு இருக்கும்.

கேரளாவில் நடக்கும் ட்கடையடைப்புப் போராட்டங்களால் மாநிலத்தின் மொத்த உற்பத்தியில், 7,200 கோடி நஷ்டம் ஏற்பட்டுள்ளதாக கொச்சின் சேம்பர் ஆப் காமர்ஸ் தெரிவித்துள்ளது.

கடந்த ஆண்டு 97 கடையடைப்புப் போராட்டங்கள் நடந்தன. வியாபாரிகள், ஒட்டல்காரர்கள், பேருந்து முதலாளிகள் ருஇம்மாதிரியான கடையடைப்புப் போராட்டத்தால் பல கோடி இழப்புகளைச் சந்திக்கின்றனர் என்று கூறுகிறார் கேரள வியாபாரி சங்க தலைவர் டி.நசாருதீன்.

கடந்த டிசம்பர் 14 ஆம் தேதி, பாஜக பிரமுகர் தன் சொந்த காரணங்களுக்காக தீயிட்டு தற்கொலை செய்துகொள்ள, பாஜக அவர் சபரிமலை விவகாரத்துக்காக தற்கொலை செய்துகொண்டார் எனக் கூறி முழுஅடைப்பு போராட்டம் நடத்தியது.

 

தற்போது கேரளாவில் சபரிமலை விவகாரம் விஸ்வரூபம் எடுத்து வருவதால், அதை முன்னிட்டு கடந்த டிசம்பர் 14ஆம் தேதி நடந்த முழுஅடைப்புப் போரடடம் அந்த வரிடத்தில் நடைபெற்ற 97ஆவது போராட்டம். இந்த போராட்டத்தால் 900 கோடி ரூபாய் நஷ்டம் அடைந்துள்ளது. இதனால் மாநில வருவாய் பாதிக்கபடுக்கிறது என  கடையயடைப்பு போராட்டங்களுக்கு எதிராகப் போராடும் சமூக ஆர்வலர்கள் கவலை தெரிவிக்கின்றனர்.