கேரளாவில் மீண்டும் அதிகரிக்கும் கொரோனா பாதிப்பு: இன்று மட்டும் 3,139 பேருக்கு தொற்று

திருவனந்தபுரம்: கேரளாவில் இன்று 3,139 பேருக்கு தொற்று உறுதியாகி  உள்ளது.

கேரளாவில் தொடர்ந்து கொரோனா நோயாளிகளின் எண்ணிக்கை தொடர்ந்து அதிகரித்துக் கொண்டே வருகிறது.  இந் நிலையில் கேரளாவில் இன்று மேலும் 3,139 பேருக்கு தொற்று உறுதிப்படுத்தப்பட்டுள்ளது.

இது குறித்து கேரளா சுகாதாரத்துறை வெளியிட்டுள்ள அறிக்கையில் கூறப்பட்டு உள்ளதாவது: கேரளாவில் இன்று 3,139 பேருக்கு கொரோனா தொற்று உறுதியாகி உள்ளது. இதன் மூலம் கொரோனா நோயாளிகளின் எண்ணிக்கை 1,08,278 ஆக இருக்கிறது.

இன்று நோயாளகளில் 36 பேர் வெளிநாடுகளில் இருந்தும், 126 பேர் வெளி மாநிலங்களில் இருந்தும் வந்தவர்கள். 2,921 பேர் தொடர்பிலிருந்ததன் மூலம் பாதிக்கப்பட்டுள்ளனர். இவர்களுள் 251 பேருக்கு தொற்று ஏற்பட்டது என்பது குறித்து கண்டறியப்படவில்லை.

கொரோனா பாதிப்புக்கு இன்று மட்டும் 14 பேர் பலியாக, இதுவரை 439 பேர் உயிரிழந்து உள்ளனர். தொற்று பாதிப்புடன் 30,072 பேர் சிகிச்சையில் உள்ளனர் என்று தெரிவிக்கப்பட்டுள்ளது.