கேரளாவில் மேலும் 4,351 பேருக்கு கொரோனா: சுகாதாரத்துறை தகவல்

திருவனந்தபுரம்: கேரளாவில் இன்று மேலும் 4,351 பேருக்கு கொரோனா தொற்று உறுதியாகி இருக்கிறது.

இதுதொடர்பாக, சுகாதாரத்துறை வெளியிட்டுள்ள அறிக்கையில் கூறப்பட்டு உள்ளதாவது: மாநிலத்தில் கடந்த 24 மணி நேரத்தில் 4,351  பேருக்கு கொரோனா இருப்பது சோதனையில் உறுதி செய்யப்பட்டது. அவர்களில் 72 சுகாதார பணியாளர்களுக்கும் கொரோனா தொற்று ஏற்பட்டு உள்ளது.

கொரோனா வைரஸ் பரவலுக்கு இன்று ஒரே நாளில் மட்டும் 10 பேர் பலியாகி உள்ளனர். மேலும், தற்போது 34,314 பேர் சிகிச்சை பெற்று வருகின்றனர். 87,345 பேர் கொரோனாவில் இருந்து குணம் பெற்று உள்ளனர் என்று தெரிவிக்கப்பட்டு உள்ளது.