கேரளாவில் இன்று 5042 பேருக்கு கொரோனா தொற்று உறுதி…!

திருவனந்தபுரம்: கேரளாவில் இன்று புதிதாக 5,042 பேருக்கு கொரோனா  தொற்று உறுதி செய்யப்பட்டுள்ளது.

23 பேர் கொரோனா தொற்றால் பலியாக, ஒட்டு மொத்தமாக பலியானோரின் மொத்த எண்ணிக்கை 859 ஆக உயர்ந்துள்ளது. இன்று பாதிக்கப்பட்டவர்களில் 29 பேர் வெளிநாடுகளிலிருந்தும், 102 பேர் வெளிமாநிலங்களிலிருந்தும் வந்தவர்கள்.

4,338 பேர் உள்ளூர் பரவல் மூலம் பாதிக்கப்பட்டுள்ளனர். அவர்களில் 450 பேருக்கு தொற்று எப்படி ஏற்பட்டது என்பது இன்னும் கண்டறியப்படவில்லை.

கொரோனா சிகிச்சையில் உள்ளவர்களில் 4,640 பேருக்கு கொரோனா தொற்று இல்லை என்பது உறுதியாகியுள்ளது. தொற்று உறுதி செய்யப்பட்டவர்களில் 84,873 பேர் இன்னும் சிகிச்சையில் உள்ளனர். மொத்தம் 1,49,111 பேர் கொரோனாவில் இருந்து குணமடைந்துள்ளனர்.