கேரளாவில் 8,553 பேருக்கு கொரோனா தொற்று உறுதி: இன்று மட்டும் 23 பேர் பலி

திருவனந்தபுரம்: கேரளாவில் 24 மணி நேரத்தில் 8,553 பேருக்கு கொரோனா தொற்று உறுதி செய்யப்பட்டுள்ளது.

இதையடுத்து கொரோனா உறுதி செய்யப்பட்டவர்கள் எண்ணிக்கை 2,28,886 ஆக அதிகரித்துள்ளது. கொரோனா பாதிப்புக்கு இன்று 23 பேர் பலியாகி உள்ளனர்.

ஒட்டுமொத்தமாக இதுவரை 836 பேர் கொரோனாவுக்கு உயிரிழந்துள்ளனர். மாநிலத்தில் 1,44,471 பேர் தொற்று பாதிப்பில் இருந்து குணம் அடைந்து உள்ளனர். 84,497 பேர் தொற்று பாதிப்புடன் சிகிச்சையில் உள்ளதாக அம்மாநில சுகாதாரத்துறை தெரிவித்துள்ளார்.