கேரளாவில் இன்று 8830 பேருக்கு கொரோனா: மாநிலத்தில் பாதிப்பின் புதிய உச்சம்

திருவனந்தபுரம்: கேரளாவில் இன்று கொரோனா பாதிப்பு புதிய உச்சத்தை எட்டியுள்ளது.

கேரளாவில் சில வாரங்களாக கொரோனா தொற்று மின்னல் வேகத்தில் பரவி வருகிறது.  இந் நிலையில், கேரளாவில் இதுவரை இல்லாத அளவாக இன்று ஒரே நாளில் 8,830 பேருக்கு கொரோனா உறுதி செய்யப்பட்டுள்ளது.

அவர்களில் 58 பேர் வெளிநாடுகளில் இருந்தும், 164  பேர் வெளி மாநிலங்களில் இருந்து வந்தவர்கள். 7695 தொடர்புகள் மூலம் தொற்று பாதித்தவர்கள் என்று  கேரள சுகாதாரத்துறை தெரிவித்துள்ளது.

இன்று 23 பேர் உயிரிழக்க, ஒட்டுமொத்தமாக உயிரிழந்தவர்கள் எண்ணிக்கை 742 ஆக உயர்ந்துள்ளது. மாநிலத்தில் அதிகபட்சமாக எர்ணாகுளத்தில் 1,056 பேருக்கு தொற்று உறுதியாகி உள்ளது.