கேரளாவில் முன் எப்போதும் இல்லாத உயர்வு: ஒரே நாளில் 4696 பேருக்கு கொரோனா பாதிப்பு

திருவனந்தபுரம்: கேரளாவில் முதல் முறையாக அதிகபட்சமாக 4696 பேருக்கு ஒரே நாளில் கொரோனா தொற்று ஏற்பட்டுள்ளது.

கேரளாவில் 4வது நாளாக 4 ஆயிரத்திற்கும் மேல் கொரோனா வைரஸ் தொற்று பதிவாகி உள்ளது.  இன்று ஒரே நாளில் 4,696 பேருக்கு கொரோனா உறுதியாகி இருக்கிறது.

16 பேர் சிகிச்சைபலனின்றி உயிரிழந்ததால், கொரோனாவால் பலியானவர்களின் எண்ணிகை 536 பேராக அதிகரித்துள்ளது. 39,415 பேர் கொரோனாவுக்கு மருத்துவமனையில் சிகிச்சையில் உள்ளனர்.

கொரோனாவிலிருந்து இன்று 2,751 பேர் குணம் பெற்றுள்ளனர். ஒட்டு மொத்தமாக இதுவரை 95,702 பேர் கொரோனாவிலிருந்து மீண்டு வீடு திரும்பியுள்ளனர்.