கேரளா : ரெட் அலர்ட் திரும்ப பெறப்பட்டது.

திருவனந்தபுரம்

டும் வெள்ளம் காரணமாக கேரள மாநிலத்துக்கு விடுக்கப்பட்ட ரெட் அலர்ட் திரும்ப பெறப்பட்டுள்ளது.

கேரளாவில் தொடர்ந்து கனமழை பெய்ததால் வெள்ளப் பெருக்கு நிலச்சரிவு ஆகியவை ஏற்பட்டுள்ளது.   மாநிலத்தில் சுமார் 3.5 லட்சத்துக்கும் மேற்பட்டோர் பாதிக்கப்பட்டுள்ளனர்.  அனைத்து ஆறுகளிலும் வெள்ளம் பெருக்கெடுத்து ஓடியது.   கடும் மழை காரணமாக கேரள மாநிலத்துக்கு ரெட் அலர்ட் என்னும் கடும் அபாய எச்சரிக்கை விடப்பட்டிருந்தது.

தற்போது இன்று காலை முதல் மழை குறைந்துள்ளது.   அதை ஒட்டி மிட்புப் பணிகள் வேகமாக நடைபெற்று வருகிறது.   இதனால் மாநிலத்துக்கு விடப்பட்டிருந்த ரெட் அலர்ட் திரும்ப பெறப்பட்டுள்ளது.   அதற்கு மாறாக 10 மாவட்டங்களுக்கு அபாயம் எனப்படும்  ஆரஞ்ச் அலர்ட்டும் 2 மாவட்டங்களுக்கு ஓரளவு அபாயம் எனப்படும் மஞ்சள் அலர்ட் விடப்பட்டுள்ளது.