14 ஆயிரத்தை நெருங்குகிறது கேரளா கொரோனா தொற்று: இன்று மட்டும் 720 பேருக்கு பாதிப்பு

--

திருவனந்தபுரம்: கேரளாவில் மேலும் 720 பேருக்கு கொரோனா வைரஸ் தொற்று ஏற்பட்டுள்ளதாக அறிவிக்கப்பட்டுள்ளது.

தொடக்கத்தில் கேரள மாநிலத்தில் 100 முதல் 200 வரை இருந்த கொரோனா இப்போது உச்சக்கட்டத்தில் இருக்கிறது. சராசரியாக நாள் ஒன்றுக்கு 500ஐ கடந்து கொரோன தொற்றுகள் பதிவாகி வருகின்றன.

இந் நிலையில், கேரளாவில் இன்று மட்டும் 720 பேருக்கு தொற்று உறுதியாகி உள்ளது. ஒட்டு மொத்தமாக 8056 பேர் மருத்துவமனையில் சிகிச்சையில் உள்ளனர்.

இதையடுத்து கேரளாவில் தற்போது மொத்தமாக கொரோனா பாதிக்கப்பட்டவர்களின் எண்ணிக்கை 13,994 ஆகு உயர்ந்துள்ளதாக கேரள முதலமைச்சர் பினராயி விஜயன் தெரிவித்துள்ளார்.

You may have missed