கேரளாவில் புதியதாக 7,631 பேருக்கு கொரோனா தொற்று உறுதி…!

திருவனந்தபுரம்: கேரளாவில் புதியதாக 7,631 பேருக்கு கொரோனா தொற்று உறுதியாகி உள்ளது.

இது தொடர்பாக மாநில சுகாதாரத்துறை வெளியிட்டுள்ள செய்திக்குறிப்பில் கூறப்பட்டு உள்ளதாவது: பாதிக்கப்பட்ட 7631 பேரில், 6,685 பேர் கொரோனா நோயாளிகளுடன் தொடர்பில் இருந்ததன் மூலம் பரவியது.

மொத்த பாதிப்பு எண்ணிக்கை 3,41,859 ஆக உள்ளது. இன்று 22 பேர் பலியாக, மொத்த பலி எண்ணிக்கை 1,161 ஆக உயர்ந்துள்ளது. 8,410 பேர் மட்டும் இன்று குணமடைந்துள்ளனர்.

இதன்மூலம் குணம் பெற்றவர்களின் மொத்த எண்ணிக்கை 2,45,399ஆக உயர்ந்துள்ளது. இன்னமும் 95,200 பேர் சிகிச்சையில் உள்ளனர். இன்று ஒரே நாளில் 58,404 பரிசோதனைகள் மேற்கொள்ளப்பட்டுள்ளன என்று தெரிவிக்கப்பட்டு உள்ளது.