Random image

கேரளாவில் ஒரு நாள் கோடீஸ்வரர்கள்…..எஸ்பிஐ வங்கி தாராளம்

திருவனந்தபுரம்:

கேரள மாநிலம் மலப்புரம் மாவட்டம் கோட்டக்கல் ஆரிய வைத்திய சாலை ஊழியர்களின் சம்பளம் எஸ்பிஐ வங்கியில் செலுத்தப்பட்டு வருகிறது.

இந்நிலையில் 22 ஊழியர்களின் சம்பளம் ரூ. 90 லட்சம் முதல் 19 கோடி ரூபாய் வரை வரவு வைக்கப்பட்டது.

இதை கண்டு ஊழியர்கள் அதிர்ச்சியும், மகிழ்ச்சியும் அடைந்தனர். ஆனால், அந்த மகிழ்ச்சி நீண்ட நேரம் நீடிக்கவில்லை. கம்ப்யூட்டர் குளறுபடி காரணமாக இவ்வாறு தவறுதலாக பண பரிமாற்றம் நடந்ததாக கூறி ஊழியர்களின் வங்கி கணக்குகளை வங்கி நிர்வாகம் முடக்கி சரி செய்தது.

இதன் பின்னர் மறுநாள் வழக்கமான சம்பளம் மட்டுமே கணக்கில் இருந்ததை கண்டு ஊழியர்கள் நொந்துபோயினர்.