கேரள மாநிலம், கொல்லம் மாவட்டம், பரவூரில் உள்ள புட்டிங்கல்  கோவிலில்  வாண வேடிக்கை  நிகழ்ச்சியில் வெடிவிபத்து ஏற்பட்டது .
இந்த விபத்தில் மரணமடைந்தவர்கள் எண்ணிக்கை  108 ஆகவும் , படுகாயமடைந்தவர்கள் எண்ணிக்கை 350 தாண்டியுள்ளது.
ஏற்கனவே வெடி சப்ளை செய்த ஒப்பந்தக்காரர் கைது செய்யப் பட்டார்.
தலைமறைவாயிருந்த கோவில் நிர்வாகிகளை போலிசார் தேடி வந்தனர்.
இந்நிலையில், 20 அறங்காவலர்கள் மீது வழக்கு பதிவுச் செய்யப் பட்டு உள்ளது. இதுவரை கோவில் அறங்காவலர்கள் 7 பேர்  கைது செய்யப் பட்டு உள்ளனர்.
தலைவர்: ஜெயலால், செயலாளர்: கிருஷ்னன் குட்டி, சிவபிரசாத், சுரேந்திரன்பிள்ளை, ரவீந்திரன்  பிள்ளை ஆகியோர் கிரைம் போலிசாரிடம் சரணடைந்தனர்.
மேலும், சுரேந்திரநாதன் பிள்ளை மற்றும் முருகேசன் ஆகியோரை காவல்துறை செவ்வாய்க்கிழமை காலை கைது செய்துள்ளது.