கேரளாவை அதிர்ச்சிக்குள்ளாக்கிய ஜிஷா கொலை: 7 பேர் கைது. 10 லட்சம் இழப்பீடு

கேரள மாநிலம் எர்ணாகுளம் மாவட்டத்தில் உள்ள பெரும்பாவூரை சேர்ந்த சட்டக்கல்லூரி மாணவி ஜிஷா (30), தலீத் சமூகத்தைச் சேர்ந்தவர்.இவர் கடந்த 6 நாட்களுக்கு மூன், அவரது வீட்டிலேயே பாலியல் பலாத்காரம் செய்யப்பட்டு கொடூரமாக கொலை செய்யப்பட்டுக் கிடந்தார்.
மாணவியின் பிரேத பரிசோதனையில் அவரது மர்ம உறுப்புகளில் கூர்மையான ஆயுதங்களால் தாக்கப்பட்டுள்ளதாகவும் தெரிவிக்கப்பட்டுள்ளது.

jis feas
கடந்த வியாழனன்று இரவு இந்த கொடூரக் கொலை நிகழ்ந்துள்ளது.
இந்தப் பெண்ணின் தாயார் இரவு 08.30 மணிக்கு வேலைக்குச் சென்று திரும்பிய போது, அவரது மகள் பின்னந்தலை, மார்பு, கன்னம், கழுத்து என உடலெங்கும் சிதைக்கப்பட்டு படுகாயங்களுடன் இரத்த வெள்ளத்தில் பிணமாய்க் கிடந்ததைப் பார்த்தார்.
இந்தப் பெண், டெல்லி ஜோதியைப் (நிருபையா) போல், கொல்லப்படுவதற்கு முன் கொடூரமாய்த் தாக்கப்பட்டதற்கான ஆதாரங்கள் உள்ளன என்று காவல்துறையினர் குறிப்பிட்டனர்.

பிரேதப் பரிசோதனை :
இந்தப் பெண்ணின் பிறப்புறுப்பில் கூர்மையான ஆயுதத்தை செலுத்தியதில் அவரது குடல்கள் வெளியே பிதுங்கித் தொங்கியது. அவரது உடம்பில் 30 படுகாயங்கள் உள்ளன. அவரது இரு மார்பகங்களும் கூர்மையான கத்தி கொண்டு கிழிக்கப் பட்டு உள்ளன. அவரது மரணத்திற்கு காரணம், அவரது பின்மண்டையில் பட்ட காயம் என்றும் காவல்துறையினர் கூறுகின்றனர்.

ஜிஷாவின் தாயுடனான தகராறினால் அக்கம் பக்கத்தினர் யாரும் ஜிசா வீட்டினருடன் பேசுவதில்லை. ஜிஷாவின் தந்தை பிரிந்து  சென்று விட்டார். ஜிஷாவின் சகோதரிக்கு திருமணமாகிவிட்டது. ஜிஷா தான் அர்யர் வைத்த பாடங்களைப் படித்து  கொண்டிருந்தார். இந்நிலையில் இந்த கொலை நிகழ்ந்துள்ளது.

இவ்வளவு கோரம் நடைபெற்ற அந்த சிறிய வீட்டில் அருகில் உள்ளவர்களுக்கு இது குறித்து எதுவும் தெரியவில்லை.

அக்கம்பக்கத்தினர் இந்த சம்பவம் குறித்து கூறுகையில், தங்களுக்கு எந்த கூக்குரலோ, அழுகை சப்தமும் கேட்கவில்லை என்றனர். எனவே, அந்தப் பெண்ணின் வாயை அவரது துப்பட்டா கொண்டு கட்டியிருக்கலாம் என்று நம்பப்படுகின்றது.
ஒன்றுக்கு மேற்பட்டவர்கள் இதில் ஈடுபட்டிருக்கலாம் என்றும் காவல்துறை விசாரணையைத் துவக்கியது.

இந்தப் பெண் கொடூரமான முறையில் கொலை செய்யப்பட்டு இருந்தாலும், காவல்துறை முதலில் மெத்தனமாகவே இந்த வழக்கை கையாண்டனர். பத்திரிக்கைகள் இந்தச் செய்தியை பெரிதுப்படுத்தியவுடன், காவல்துறை விரைந்து நடவடிக்கை எடுக்கத் துவங்கியது.

பெண்ணின் மூக்கு சுத்திய போன்ற ஆயுதத்தால் தாக்கப்பட்டு சிதைந்து காணப்பட்டது. அவரது உடம்பில் அவரது மேலாடை மட்டுமே மீதம் இருந்தது.
இந்தப் பெண்ணின் பெற்றோர் மிகவும் பொருளாதாரத்தில் பின்தங்கியவர்கள். அவர்கள் ஒரு பொறம்போக்கு இடத்தில் , மிகவும் சிறிய, ஒரே ஒரு அறையைக் கொண்ட வீட்டில் வசித்து வந்தனர். அவர் பலாத்காரம் செய்யபட்ட போது அவர் போராடியதற்கான சாட்சியாய் வீடெங்கும் பொருட்கள் சிதறிக் கிடந்தன.
கேரள மாநிலத்தின் புலம்பெயர் கூலித்தொழிலாளர்கள் வசிக்கும் பகுதியில் கோரச் சம்பவம் நிகழ்ந்துள்ளது.  எனவே காவல்துறை தங்களது விசாரணையை இவர்களை நோக்கித் திருன்பக் காரணம், கூர்மையான ஆயுதங்களால் தாக்கப்பட்டு மரணம் நிகழ்ந்துள்ளதே காரணம்.
மனநலம் பாதிக்கப்பட்ட ஒருவரால் இந்த கொலை நிகழ்த்தப் பட்டது எனும் வதந்தியை காவல்துறை நிராகரித்துவிட்டது. கொலை நடந்த இடத்தில் விந்துத் துளி உள்ளதா என்றும் நிபுணர்கள் ஆராய்ந்தனர்.

பத்து லட்சம் இழப்பீடு:

தேர்தல் கமிஷன் அனுமதியுடன், கொல்லப்பட்ட ஜிஷாவின் குடும்பத்தினருக்கு  பத்து லட்சம் இழப்பீடு மற்றும் அவரது சகோதரிக்கு அரசு வேலையை போர்க்கால அடிப்படையில் ஏற்பாடு செய்ய தலைமைச் செயலாளருக்கு முதல்வர் உத்தரவிட்டுள்ளார்.

அவர்கள் குடும்பத்தினர் தங்க ஒரு வீடு கட்டித் தர எர்ணகுளம் மாவட்ட கலெக்டருக்கு கேரள முதல்வர் உத்தரவிட்டுள்ளார்.

உம்மன்சாண்டி 10 லட்சம் இழப்பீடு அறிவிப்பு.(படம் நன்றி : மாத்ருபூமி)

 

கைது செய்யப் பட்ட நபர் ஏற்கனவே கஞ்சா வழக்கில் கைதானவர்:

26 வயது வாலிபர், கொலை நடந்த மற்நாள் முதல் தலை மறைவாகியுள்ளார். தான் கஞ்சா வழக்கில்  கைதான விரக்தியில் தலைமறைவானதாக கூறியுள்ளார்.  இந்தகொலைக்கும் தனக்கும் எந்த சம்மந்தமும் இல்லை என்றும் கூறியுள்ளார். கைரேகைகள் கைது செய்யப்பட்ட நபருடன் ஒத்துப் போகவில்லை.

ஆனால், அவரது  அலைபேசியின் டவர் சிக்னல் தகவல்களை ஆராய்ந்ததில், அவர் கொலை நடந்த சமயத்தில், சம்பவ இடத்தின் அருகில் தான் இருந்துள்ளார் என்பது புலப்படுகின்றது.

கன்னூரில் கைது செய்யப்பட்ட அவர், அலுவாவிற்கு கொண்டுவரப்பட்டு, மீண்டும் இரகசிய இடத்திற்கு மேல்விசாரனைக்காக கொண்டுசெல்லப்பட்டுள்ளார்.

இதுவரை ஏழு பேர் விசாரணை வளையதிற்குள் உள்ளனர்.

எர்ணாகுளம்  ஐ.ஜி. மகிபால் யாதவ், அலுவா எஸ்.பி. ரதீஷ் சந்திரா மற்றும் பெரும்பாவூர் துனை எஸ்.பி. அனில் குமார் ஆகியோர்  கிடிக்கிப்பிடி விசாரனையை மேற்கொண்டு வருகின்றனர்.

உயிருக்கு அச்சுறுத்தல் என அளித்த புகாரை போலிசார் உதாசீனப்படுத்தியதால் இந்த விபரீதம் நிகழ்ந்துள்ளது:

மருத்துவமனையில் அனுமதிக்கப் பட்டுள்ள ஜிஷாவின் தாயார் ராஜேஷ்வரி  ”  கடந்த ஓராண்டு காலமாக தனக்கு சிலர் தொல்லை கொடுத்து வருவதாக  ஜிஷா  போலீசில் தெரிவித்தும் போலீசார் அந்த புகாரை கண்டுகொள்ளவில்லை” என குற்றம்சாட்டியுள்ளார்.

வெங்கைய நாயுடு வருகை:

பாதிக்கப்பட்ட மாணவியின் தாயாரை சந்திப்பதற்காக  இன்று  கேரளாவுக்கு வரவுள்ளார், சட்டத் துறை அமைச்சர் வெங்கையா நாயுடு. குற்றவாளிகள் தப்பமுடியாது என்றும் கூறினார்.

தலைமைச் செயலகம் முற்றுகை:

இந்தக் கொலையைக் கண்டித்து மாணவர்கள் நேற்று மாநிலம் முழுவதும் கண்டன பேரணி நடத்தினர். இந்நிலையில் இன்று கேரளாவில் உண்மைக் குற்றவாளிகளைக் கைது செய்யக் கோரி இந்திய மாணவர் சங்கம் உள்ளிட்ட இடதுசாரி  மாணவர்கள் அமைப்புகள்  சார்பாக  திருவனந்தபுரத்தில் உள்ள தலைமைசெயலகத்தை முற்றுகையிடும் போராட்டம் நடைபெற்றது.


கேரள மாணவி கொலை வழக்கில் இருவர் கைது