திருவனந்தபுரம்:
காற்றாலை மோசடி வழக்கிற்காக கோவை வந்த சரிதா நாயர், கேரள சூரிய மின் தகடு வழக்கில் 9 அரசியல்வா திகள்  ஊழல் புரிந்துள்ளனர்.  அதில் திமுகவை சேர்ந்த முன்னாள் மத்திய அமைச்சர் பழனிமாணிக்கத்திற்கும் தொடர்பு உண்டு என்று கூறினார்.

திமுக பழனிமாணிக்கம் சோலார் தகடு சரிதா நாயர்
திமுக பழனிமாணிக்கம்                 சோலார் தகடுபொருத்தப்பட்ட வீடு        சரிதா நாயர்

கேரளவில் வீடுகளுக்கு சூரிய மின்தகடுகள் பொருத்துவதாகக் கூறி பல கோடி ரூபாய் முறைகேடு கடந்த  காங்கிரஸ் ஆட்சியின்போது நடைபெற்றது.  இந்த வழக்கில் முக்கிய குற்றவாளியாக சரிதா நாயர் சேர்க்கப்பட்டார். தற்போது இந்த வழக்கை நீதிபதி ஜி.சிவராஜன் தலைமையிலான நீதி ஆணையம் விசாரித்து வருகிறது.
கேரளாவையே உலுக்கிய இந்த ஊழல் வழக்கில் அப்போதைய முதல்வர்  உம்மன்சாண்டி மற்றும் மின்சார துறை அமைச்சர் ஆரியாடன் முகமது ஆகியோருக்கு  ரூ.1.90 கோடி லஞ்சம் கொடுத்ததாக கூறினார்.  மேலும் இந்த ஊழலில் திமுகவை சேர்ந்த முன்னாள்  மத்திய அமைச்சர் பழனி மாணிக்கத்துக்கும் தொடர்பு உள்ளது என்றார்.
அவருக்கு எதிரான ஆதாரத்தை சோலார் கமிஷனிடம் ஏற்கனவே  ஒப்படைத்து விட்டேன் என்றும் இந்த முறைகேட்டில் சிக்கிய மேலும் 9 அரசியல்வாதிகளுக்கு எதிரான ஆதாரமும் என்னிடம் உள்ளது என்றார்.