கருணாநிதி உடலுக்கு கேரள கவர்னர், முதல்வர், எதிர்க்கட்சி தலைவர் நேரில் அஞ்சலி

சென்னை:

திமுக தலைவர் கருணாநிதிக்கு உடலுக்கு  கேரள கவர்னர் சதாசிவம், கேரள  முதல்வர் பிரனாயி விஜயன்,  எதிர்க்கட்சி தலைவர் ரமேஷ் சென்னிதாலா ஆகியோர்  நேரில் வந்து  அஞ்சலி  செலுத்தினார்.

கருணாநிதி உடல் வைக்கப்பட்டுள்ள ராஜாஜி ஹாலில் நாடு முழுவதும் இருந்த ஏராளமான தலைவர்கள், திமுக தொண்டர்கள் என லட்சக்கணக்கானோர் அஞ்சலி செலுத்தி வருகின்றனர்.

இந்த நிலையில், பிற்பகல் 2.50 மணி அளவில் கேரள கவர்னர் சதாசிவம், கேரள  முதல்வர் பிரனாயி விஜயன்,  எதிர்க்கட்சி தலைவர் ரமேஷ் சென்னிதாலா ஆகியோர் வருகை தந்து மலர் வளையம் வைத்து அஞ்சலி செலுத்தினார்.

முன்னதாக  தெலுங்கானா முதல்வர் சந்திரசேகர ராவ், உ.பி. மாநில முன்னாள் முதல்வர் அகிலேஷ், பீகார் மாநில முன்னாள் துணைமுதல்வர் தேஜஸ்வி யாதவ்,  உள்பட பலர்  கருணாநிதி உடல் வைக்கப்பட்டுள்ள ராஜாஜி ஹாலுக்கு வருகை தந்து மலர் வளையம் வைத்து அஞ்சலி செலுத்தினார்.

ஏற்கனவே பிரதமர் மோடி, அகில இந்திய காங்கிரஸ் தலைவர் ராகுல்காந்தி, புதுச்சேரி முதல்வர் நாராயணசாமி, கம்யூனிஸ்டு தலைவர் சீத்தாராம் யெச்சூரியும் கருணாநிதி உடலுக்கு மலர் வளையம் வைத்து அஞ்சலி செலுத்தினர்.

கார்ட்டூன் கேலரி