ஆபாச பேச்சு!! கேரளா அமைச்சர் ராஜினாமா

திருவனந்தபுரம்:

கேரளா போக்குவரத்து துறை அமைச்சர் சுசீந்திரன் பெண்ணிடம் ஆபாசமாக பேசிய ஆடியோ வெளியானதை தொடர்ந்து அவர் பதவியை ராஜினாமா செய்துள்ளார்.

கேரளா போக்குவரத்து துறை அமைச்சர் சுசீந்திரன் 1980,1982,2006,2011 ஆம் ஆண்டுகளில் சட்டசபை தேர்தலில் வெற்றிபெற்றவர். இவருக்கு மக்கள் மத்தியில் நல்ல செல்வாக்கு உள்ளது.
தேசியவாத காங்கிரஸ் கட்சியை சேர்ந்த இவர் ஒரு பெண்ணுடன் ஆபாசமாக தொலைபேசியில் பேசியுள்ளார். இந்த ஆடியோவை கேரளா மங்களம் தொலைக்காட்சி சேனல் இன்று வெளியிட்டு பரபரப்பை ஏற்படுத்தியது.

கேரளா அரசியல் வட்டாரம், பொதுமக்கள் மத்தியில் தற்போது பெரும் பரபரப்பாக பேசப்பட்டு வருகிறது.இதையடுத்து சுசீந்திரன் தனது அமைச்சர் பதவியை ராஜினாமா செய்வதாக அறிவித்துள்ளார்.

மேலும் இதுகுறித்து முறையான விசாரணை நடத்தப்பட வேண்டும் என கேரளா முதலமைச்சர் பினராயி விஜயனுக்கு அவர் கோரிக்கை விடுத்துள்ளார். ராஜினாமா செய்திருப்பதால் குற்றத்தை ஒப்புக்கொண்டதாக அர்த்தமில்லை என்று அவர் தெரிவித்துள்ளார்.

ஏற்கனவே தொழில் துறை அமைச்சர் ஜெயராஜன் கடந்த அக்டோபர் மாதம் ராஜினாமா செய்தார். அரசு தொழில் நிறுவனங்களில் தங்களது குடும்ப உறுப்பினர்களை நியமனம் செய்த குற்றச்சாட்டுக்கள் தொடர்பாக இவர் பதவியை துறந்தார்,

English Summary
Kerala state Transport Minister AK Saseendran resigned on Sunday, after a new Malayalam channel aired an audio clip