வெள்ளத்தில் தனது குடும்பம் சிக்கி தவிக்கையில் ஆசியப் போட்டியில் வரலாற்று சாதனை படைத்த வீரர்

கேரள வெளத்தில் தனது குடும்பம் தத்தளித்த போதிலும் ஆசிய விளையாட்டு போட்டியில் சஜன் பிரகஷ் இறுதி சுற்றுக்கு முன்னேறி சாதனை படைத்துள்ளார். கிட்டத்தட்ட 32 ஆண்டுகளுக்கு பிறகு ஆசிய போட்டியில் இறுதி சுற்றுக்கு சஜன் பிரகாஷ் இறுதி சுற்றுக்கு தகுதி பெற்றுள்ளார்.

ஆசிய விளையாட்டுப் போட்டிகள் இந்தோனேசியாவில் உள்ள ஜகர்தாவில் நடைபெற்று வருகின்றன. இந்திய சார்பில் 524க்கும் மேற்பட்ட வீரர், வீராங்கனைகள் பங்கேற்று விளையாடி வருகின்றனர். இதன் தகுதி சுற்றில் 200 மீ பட்டர்பிளை பிரிவில் கேரளா மாநிலம் இடுக்கு மாவட்டத்தை சேந்த சஜன் பிரகாஷ் கலந்து கொண்டார்.

sajan

கேரளாவில் வரலாறு காணாத அளவில் கனமழை பொழிந்து வருவதால் மாநிலம் முழுவதும் வெள்ளநீர் சூழ்ந்துள்ளது. 300க்கும் மேற்பட்டோர் உயிரிழந்த நிலையில் லட்சக்கணக்கான மக்கள் உடமைகளை இழந்து முகாம்களில் தங்க வைக்கப்பட்டுள்ளனர். அவர்களுக்கு தேவையான உதவிகளை மாநில அரசு செய்து வருகிறது.

சஜன் பிரகாஷ் ஆசிய போட்டியில் பங்கேற்று விளையாடி வரும் நிலையில் கேரளாவில் அவரது குடும்பம் வெள்ளத்தில் சிக்கி தத்தளித்து வருகிறது. சஜன் பிரகாஷின் தாய் தனது மகனுக்கு அவர்களின் கஷ்டம் தெரிய கூடாது என்பதற்காக வெள்ளப்பாதிப்பு குறித்து தெரியப் படுத்தாமல் மறைத்துள்ளார்.

இந்நிலையில் ஆசிய விளையாட்டு போட்டியில் 200 மீ பட்டர்பிளை நீச்சல் பிரிவில் பங்கேற்ற சஜன் சிறப்பாக செயல்பட்டு, இறுதி சுற்றுக்கு முன்னேறியுள்ளார். சுமார் 32 ஆண்டுகளுக்கு பிறகு நீச்சல் போட்டியில் சஜன் இறுதி சுற்றுக்கு முன்னேறியுள்ளது குறிப்பிடத்தக்கது.

முன்னதாக 1986ம் ஆண்டு கசன் சிங் 200 மீ பட்டர்பிளை நீச்சல் போட்டியில் பங்கேற்று இறுதி சுற்றுக்கு முன்னேறியது சாதனையாக இருந்து வந்தது.

போட்டி முடிந்த பிறகு பேசிய சஜன், “ எங்கள் குடும்பத்தினர் எங்கு, எப்படி இருக்கின்றனர் என்று தெரியவில்லை. எங்கோ ஓர் இடத்தில் பாதுகாப்பாக உள்ளதாக அறிகிறேன். அவர்களின் நலனுக்காக நான் பிரார்த்திக்கிறேன்.

எனது விளையாட்டில் எந்தவித பாதிப்பும் ஏற்படக் கூடாது என்று என் தாய் நினைத்துள்ளார். அவர்களிடம் வரலாற்று சாதனை படைத்த விஷயத்தை எப்படி கூறுவது எனத் தெரியவில்லை ” என்று வருத்தத்துடன் கூறியது அனைவரையும் கண்கலங்க வைத்தது.