சிறந்த ஆட்சி செய்யும் மாநிலங்களில் இந்த ஆண்டும் இடம்பிடித்த தமிழகம்…

டெல்லி: கடந்தஆண்டு (2019)  மத்தியஅரசு வெளியிட்ட புள்ளிவிவரங்களின்படி ஒட்டுமொத்தச் செயல்பாட்டில் தமிழகஅரசு முதலிடத்தில் இருப்பதாக அறிவித்தது. இந்த நிலையில், தற்போது (2020) வெளியிடப்பட்டுள்ள அறிவிப்பில், தமிழகம் மீண்டும் சிறந்த ஆட்சி செய்யும் மாநில பட்டியலில் இடம்பிடித்துள்ளது.  சிறந்த நிர்வாகம் செய்யும் மாநிலங்களில்  கேரளாவை அடுத்து, தமிழகம் 2வது இடத்தை பிடித்துள்ளது.

மத்திய அரசின் நிர்வாகச் சீர்திருத்தத் துறை மற்றும் பொதுக் குறை தீர்ப்புத் துறை மாநில அரசுகளின் நிர்வாகம் குறித்த தரவரிசைப் பட்டியல் ஒன்றை Good Governance Index என்ற பெயரில் வெளியிட்டுள்ளது. முன்னாள் இந்திய விண்வெளி ஆராய்ச்சி அமைப்பின் (இஸ்ரோ) தலைவர் கே. கஸ்துரிரங்கன் தலைமையிலான  குழுவினர்  நகரத்தை அடிப்படையாகக் கொண்ட இலாப நோக்கற்ற அமைப்பு, அதன் வருடாந்திர அறிக்கையில், நிலையான வளர்ச்சியின் பின்னணியில் ஒரு கூட்டு குறியீட்டின் அடிப்படையில் மாநிலங்கள் நிர்வாக செயல்திறனில் தரவரிசைப்படுத்தப்பட்டு இருப்பதாக தெரிவித்துள்ளார்.

மாநிலத்தின் ஒட்டுமொத்த செயல்பாடு தவிர முக்கியமான  பிரிவுகளின் கீழும் மாநிலங்கள் தரவரிசைப்படுத்தப்பட்டுள்ளன.  சமத்துவம், வளர்ச்சி மற்றும் நிலைத்தன்மை ஆகிய மூன்று தூண்களால் வரையறுக்கப்பட்ட நிலையான வளர்ச்சியின் பின்னணியில் நிர்வாக செயல்திறன் பகுப்பாய்வு செய்யப்படுகிறது.   பெரிய மாநிலங்கள், மலைப்பிரதேச மாநிலங்கள், யூனியன் பிரதேசங்கள் என மூன்று வகைகளில் மாநிலங்கள் பிரிக்கப்பட்டு, அவை தரவரிசைப்படுத்தப்பட்டன.

அதில்,  பெரிய மாநில பிரிவில் சிறந்த ஆளும் மாநிலங்களாக முதல் நான்கு இடங்களைப் தென்மாநிலங்களே பெறுகின்றன. முதலிடத்தை கேரளா பிடித்துள்ளது. அதைத்தொடர்ந்து 2வது இடத்தை தமிழகமும், தொடர்ந்து, ஆந்திரா, கர்நாடக மாநிலங்கள் இடம்பிடித்துள்ளன.

சிறந்த நிர்வாகத்தில் இடம்பிடித்த நான்கு தென் மாநிலங்கள்

முதல்இடம்: கேரளா (1.388 பிஏஐ இன்டெக்ஸ் பாயிண்ட்),

2வது இடம்: தமிழ்நாடு (0.912)

3வது இடம்: ஆந்திரா (0.531)

4வது இடம்: கர்நாடகா (0.468) ஆகியவை பெரிய மாநில பிரிவில் முதல் நான்கு தரவரிசையில் ஆட்சியின் அடிப்படையில் உள்ளன.

அதைத்தொடர்ந்து,   உத்தரப்பிரதேசம் (-1.461), ஒடிசா (-1.201), பீகார் (-1.158) ஆகியவை கீழே உள்ளன.

சிறிய மாநில பிரிவில், கோவா 1.745 புள்ளிகளுடன் முதல் இடத்தைப் பிடித்தது, தொடர்ந்து மேகாலயா (0.797), இமாச்சலப் பிரதேசம் (0.725).

எதிர்மறை புள்ளிகளைக் கொண்ட மோசமான  மாநிலங்களில் பட்டியலில்  மணிப்பூர் (-0.363), டெல்லி (-0.289) மற்றும் உத்தரகண்ட் (-0.277) என்று அறிக்கை கூறுகிறது.

யூனியன் பிரதேசங்கள்

யூனியன் பிரதேசங்களின் பிரிவில் சண்டிகர் 1.05 பிஏஐ புள்ளிகளுடன் முதலிடத்திலும், புதுச்சேரி (0.52), லட்சத்தீவு (0.003) முதலிடத்திலும் உள்ளன.

தாதர் மற்றும் நகர் ஹவேலி (-0.69), அந்தமான், ஜம்மு-காஷ்மீர் (-0.50), நிக்கோபார் (-0.30) ஆகிய மாநிலங்கள் மிச மோசமான நிர்வாகத்திறமையில் சிக்கியுள்ளது.

இவ்வாறு அதில் தெரிவிக்கப்பட்டு உள்ளது.