திருவனந்தபுரம்: புதிய வேளாண் சட்டங்களுக்கு எதிராக தீர்மானம் நிறைவேற்றும் வகையில் கேரள சட்டசபை கூட்டத்தின் சிறப்பு அமர்வு வரும் புதன்கிழமை கூடுகிறது.

மத்திய அரசின் புதிய வேளாண் சட்டங்களை திரும்ப பெற வலியுறுத்தி டெல்லியில் 26வது நாளாக விவசாயிகள் போராட்டம் நடத்தி வருகின்றனர். போராடும் விவசாயிகளுக்கு ஆதரவாக இந்த சட்டங்களுக்கு எதிராக சட்ட ரீதியாக நடவடிக்கை எடுக்கப்படும் என்று கேரளா ஏற்கெனவே அறிவித்திருந்தது.

இந் நிலையில், முதற்கட்ட நடவடிக்கையாக சட்டசபை சிறப்பு அமர்வை கூட்டி 3 சட்டங்களுக்கு எதிராக தீர்மானம் நிறைவேற்றப்பட உள்ளது. அதற்கான கூட்டம் வரும் புதன்கிழமை கூடுகிறது. 140 உறுப்பினர்கள் கொண்ட சட்டசபையில் ஓ. ராஜகோபால் மட்டுமே பாஜகவின் உறுப்பினராக இருக்கிறார். ஆகையால், தீர்மானம் எந்த சிக்கலும் இன்றி நிறைவேறும். ஒரு மணி நேரத்தில் இந்த சிறப்பு அமர்வு கூட்டம் முடிந்துவிடும்.