திருவனந்தபுரம்:

பாலியல் குற்றவாளிகள் பட்டியல் ஆன்லைனில் வெளியிடப்படும் என்று கேரளா கவர்னர் சதாசிவம் சட்டமன்றத்தில் தெரிவித்தார்.

கேரளா சட்டமன்ற கூட்டத் தொடரின் முதல்நாளான இன்று கவர்னர் சதாசிவம் இன்று உரையாற்றினார். அப்போது அவர் கூறுகையில், ‘‘ பாலியல் குற்றவாளிகள் தொடர்பான பதிவேடுகளை பராமரிக்க அரசு முடிவு செய்துள்ளது. இந்த குற்றத்தில் ஈடுப டுவோரது முழு விபரங்கள் இந்த பதிவேடுகளில் இருக்கும். இதை பொதுமக்கள் பார்வையிடும் வகையில் இணைய தளத்தில் வெளியிடப்படும்’’ என்றார்.

இந்த திட்டம் செயல்படுத்தப்பட்டால் நாட்டிலேயே கேரளாவில் தான் முதன்முதலாக இந்த திட்டம் செயல்படுத்தப்படுகிறது என்பது குறிப்பிடத்தக்கது.

மேலும் சதாசிவம் பேசுகையில் ‘‘பாலியல் ரீதியாக பாதிக்கப்பட்ட ஒரு சிலருக்கு நிவாரண தொகை கிடைக்கிறது. ஆனால் அதற்கு அலைந்து திரிந்து வாங்க வேண்டிய நிலை உள்ளது. நிவாரணம் கிடைக்க கால தாமம் ஏற்படுகிறது’’ என்றார்.
‘‘கேரள சமூக நீதி துறை சார்பில் நிர்பயா செல் செயல்பட்டு வருகிறது. ஆனால், பாதிக்கப்பட்டவர்களுக்கு நிவாரணம் வழங்கும் வகையில் இதில் நிதி ஆதாரம் இல்லை. பாலியல் குற்றங்களால் பாதிக்கப்படும் குழந்தைகள், பெண்களுக்கு இடைக்கால நிவாரணம் வழங்கும் வகையில் அரசு நிதி ஆதாரம் ஏற்படுத்த முடிவு செய்யப்பட்டுள்ளது’’ என்றார்.

 

‘‘சமூகத்தில் ஏற்பட்டுள்ள ஊக்க கேடின்மை காரணமாக நாடு முழுவதும் பாலியல் குற்றங்கள் அதிகரித்துள்ளது. பெண்கள் பிர ச்னைகளை எதிர்கொள்வதற்காக கேரள அரசு பிரத்யேக பெண்கள் துறையை ஏற்படுத்த முடிவு செய்துள்ளது. தாலுகா அளவில் ஒரு மகளிர் காவல் நிலையம் அமைக்கப்படும்.

அதோடு ஒவ்வொரு ஊராட்சியையும் குறிப்பிட்ட கால இடைவேளையில் ஒரு பெண் போலீஸ் அதிகாரி தேதி அறிவிக்கப்பட்டு பார்வையிடுவார்கள். காவல்துறையில் மகளிர் எண்ணிக்கையை 15 சதவீதம் உயர்த்தும் வகையில் பெண்கள் பட்டாலியன் ஏற்கனவே தொடங்கப்பட்டுள்ளது. இந்த எண்ணிக்கை 50 சதவீதமாக உயரும் என்ற நம்பிக்கை உள்ளது’’ என்றார்.

முன்னதாக காங்கிரஸ் தலைமையில் கூட்டணி கட்சி எம்எல்ஏ.க்கள் மாநிலத்தில் பெண்களுக்கு பாதுகாப்பு இல்லை என்று பேனர்களை ஏந்தியாவாரு கோஷமிட்டனர். நடிகை பாவனாவுக்கு ஏற்பட்ட பாலியல் துன்புறுத்தல் சம்பவத்தை தொடர்ந்த எதிர்கட்சிகள் போராட்டத்தில் ஈடுபட்டன. இதையொட்டியே கவர்னர் சதாசிவத்தின் உரையும் அமைந்திருந்தது என்பது குறிப்பிடத்த க்கது.

சாதாரன பெண்கள், குழந்தைகள் பாலியல் குற்றங்களுக்கு ஆளாகும் போது கொதிக்காதவர்கள், நடிகை என்றவுடன் வரிந்து கட்டிக் கொண்டு கருத்துக்களையும், கண்டனங்களையும் தெரிவிக்கிறார்கள் என்று சமூக வளை தளங்களில் கடும் விமர்சனத்துக்கு ஆளாகி வருகிறார். இந்த நிலையில் இதே நடிகை பாவனா பிரச்னை கேரளா சட்டமன்றத்தில் எதிரொலித்தது என்பது குறிப்பிடத்தக்கது.