இந்தியாவில் செய்தித்தாள் வாசிப்பதில் கேரளா முதலிடம்

இந்தியாவில் செய்தித்தாள் வாசிப்பர்கள் பற்றி ஆய்வு மேற்கொண்டதில் கேரள மாநிலத்தை சேர்ந்தவர்கள் அதிகளவில் செய்திகளை வாசிப்பது தெரிய வந்துள்ளது. இந்தியாவில் உள்ள மாநிலங்களில் 60 சதவிகித்ததினர் செய்தித்தாள்களை வாசிக்க தொடங்கியுள்ளனர். நாட்டின் மொத்த சராசரியில் 16.5 சதவிகித்ததினர் செய்தித்தாள் வாசிப்பாளராக உள்ளனர் என்றும் ஆய்வு கூறுகிறது.
tea shop news readert
சாலை ஓரங்களில் இருக்கும் டீக்கடையில் அமர்ந்தபடி செய்தித்தாள்களை வாசிப்பதுடன், அரசியல் தொடர்பான விவாதங்களிலும் சிலர் ஈடுபடுகின்றனர். இது மக்களின் அன்றாட வேலைகளில் ஒன்றாக மாறியுள்ளது. பத்திரிக்கை வாசிப்பு குறித்த ஆய்வில் கேரளாவில் உள்ள மக்கள் நாட்டின் சராசரியை விட அதிகளவில் பத்திரிக்கை வாசிப்பதில் ஈடுபடுகின்றனர். தொகைக்காட்சியில் செய்திகள் வாசிப்பது அதிகரித்த போதிலும், அதிகாலை வரும் செய்தித்தாள்களை வாங்கி படிக்கும் வாடிக்கையாளர்களின் எண்ணிக்கை இன்னும் குறையவில்லை என ஆய்வு கூறுகிறது

நான்கு ஆண்டுகளுக்கு முன்னர் பத்திரிக்கை அச்சடிக்கும் நிறுவனத்தில் இருந்து செய்திகளை ஒளிப்பரப்பும் தொலைக்காட்சி நிறுவனத்திற்கு மாறியுள்ளதாக மூத்த பத்திரிக்கையாளரும், ஆசியாநெட் நியூஸ் செய்தி நிறுவனத்தின் நிர்வாகியுமான எம்.ஜி.ராதாகிருஷ்ணன் தெரிவித்துள்ளார். தொலைக்காட்சி நிறுவனத்திற்கு மாறினாலும் தான் ஒரு பத்திரிக்கையாளராக உணர்வதாக ராதாகிருஷ்ணன் கூறியுள்ளார். மேலும், அரசியல், நாட்டு நடப்பு, சமூகம், வெளிநாட்டு தகவல்கள், வரலாறு, புவியியல் மற்றும் மக்கள் தொகை குறித்த பயிற்சி வகுப்புகளை திருவனந்தபுரத்தில் உள்ள மாணவர்களுக்கு ராதாகிருஷ்ணன் நடத்தியுள்ளார்.

100 முதல் 150 ஆண்டுகள் பழமை வாய்ந்த செய்தித்தாள் நிறுவனங்கள் இன்னும் செயல்பட்டு கொண்டிருக்கின்றன. அதனால் தான் செய்தித்தாள்களை வாசிக்கும் வாசகர்கள் இன்னும் அவர்கள் வசம் உள்ளனர். 25 ஆண்டுகள் கடந்த தொலைக்காட்சிகளால் செய்தித்தாள் வாசிப்பாளர்களை தோற்கடிக்க முடியாமல் முயற்சித்து வருகின்றன.

இணைய சேவை அதிகரித்துள்ளதன் காரணமாக இளம் தலைமுறையினர் தொலைப்பேசி மூலமே செய்திகளை உடனுக்குடன் அறிகின்றனர். இளம் தலைமுறையினரை செய்தித்தாள் இன்னும் கவர்ந்த வண்ணமே உள்ளன. கேரள மாநிலத்தில் அதிக செய்தி வாசிப்பாளர்கள் இருப்பதை தக்கவைத்து கொள்வதே அனைத்து செய்தி நிறுவனங்களின் மிகப்பெரிய குறிகோளாக உள்ளது. செய்திகளின் நுகர்வு, செய்திகள் குறித்த விமர்சனம், செய்திகளில் விளம்பரங்கள் மற்றும் அரசியல் கருத்துக்களை பார்க்கும்பொழுது இந்திய அளவில் கேரளாவில் உள்ள செய்தி நிறுவனங்கள் அதிக சுதந்திரத்தை பெற்றுள்ளன.

20ம் நூற்றாண்டில் திருவாங்கூர் பகுதியில் சிறிய அளவிலான அச்சகம் தொடங்கப்பட்டன. அதில் 15 மலையாள பத்திரிக்கைகள் செய்திகளை பிரதியிட்டன. நாளொன்றுக்கு 11ஆயிரம் பிரதிகள் விற்கப்பட்டன. பல்வேறு அரசியல் மற்றும் கிளர்ச்சிகள் மூலம் ஒருமுறை பிரபல பத்திரிக்கை நிறுவனமான மனோரமா ஒரு முறை மூடப்பட்டதாக ராதாகிருஷ்ணன் நினைவு கூர்ந்தார். கேரளாவில் உள்ள உயர்மட்ட கல்வியறிவு பெண்களின் நிலையை குறிப்பிட உதவியது. மேலும் அவர்கள் வாசிப்புக்களிலும் ஈடுபட்டு வந்தனர். கேரளாவின் எழுத்தறிவு தன்மை பெண்களை அசாதாரண நிலைக்கு உயர்த்தியுள்ளதாக கூறப்படுகிறது. தனது சிறுவயதில் தந்தையுடன் பான் கடைக்கு சென்றதாகவும், அங்கு செய்தித்தாள்களை வாசித்த பின் சில நேரங்களில் விவாதங்கள் சண்டைகளாக மாறும் என்றும் எழுத்தாளர் சந்திரமதி குறிப்பிட்டுள்ளார்

உயர்மட்ட கல்வியறிவு, பெண்களின் எழுத்தறிவு, பத்திரிக்கை சுதந்திரம், அரசியல் விவாதங்களில் கண்ணியம் உள்ளிட்ட காரணங்களினால் கேரள மக்களை பத்திரிக்கைகள் தன் வசம் வைத்துள்ளன என்பது நிதர்சனமான உண்மை.