ஐஎஸ்எல் கால்பந்து – கேரளா vs வடகிழக்கு யுனைடெட் ஆட்டம் டிரா!

பனாஜி: ஐஎஸ்எல் கால்பந்து 7வது சீசனின் லீக் போட்டி ஒன்றில், கேரளா – வடகிழக்கு யுனைடெட் அணிகள் மோதிய ஆட்டம் 2-2 என்ற கணக்கில் டிரா ஆனது.

பம்போலிம் மைதானத்தில் நடைபெற்ற போட்டியில் கேரளா – வடகிழக்கு யுனைடெட் அணிகள் மோதின. இப்போட்டி துவங்கிய 5வது நிமிடத்திலேயே கேரள அணியின் கிடோ ஒரு கோல் அடித்தார்.

மேலும், முதல் பாதியில் கேரளாவுக்கு ஒரு பெனால்டி வாய்ப்பும் கிடைத்தது. இதையும் அந்த அணி கோலாக மாற்ற, முதல் பாதி முடிவில், 2-0 என்ற கணக்கில் முன்னிலைப் பெற்றது கேரள அணி.

இரண்டாவது பாதியில், வடகிழக்கு யுனைடெட் அணி எழுச்சி கண்டது. 51வது நிமிடத்தில் அந்த அணியின் அபையா ஒரு கோலும், 90வது நிமிடத்தில் சைலா ஒரு கோலும் அடிக்க, போட்டியை சமன் செய்தது.

கடைசி நிமிடத்தில் எந்த அணியாலும் கோல் அடிக்க முடியாததால், போட்டியானது 2-2 என்ற கணக்கில் சமனில் முடிவடைந்தது.