கேரள நீர்வளத்துறை அமைச்சர் மேத்யூ தாமஸ் திடீர் ராஜினாமா

திருவனந்தபுரம்:

கேரள மாநில அரசில் நீர்வளத்துறை அமைச்சராக பதவி வகித்து வந்தவர் மேத்யூ தாமஸ். இவர்  இன்று தனது பதவியை  திடீரென ராஜினாமா செய்தார்.  கேரள தலைமை செயலகத்தில் முதல்வர் பினராயி விஜயனிடம் தனது ராஜினாமா கடிதத்தை நேரில் வழங்கினார்.

கேரள முதல்வரிடம் ராஜினாமா கடிதத்தை ஒப்படைத்த மேத்யூ தாமஸ்

மதசார்பற்ற ஜனதாதளம் கட்சியின் உயர்மட்டக் குழுவில் எடுக்கப்பட்ட முடிவின்படி அவர் தனது பதவியை ராஜினமா செய்திருப்பதாகவும், அவருக்கு பதில், கிருஷ்ணகுட்டி எம்எல்ஏ அமைச்சராக நியமிக்கப்படுவார் என்றும் அறிவிக்கப்பட்டு உள்ளது.

தமிழகத்தின் அண்டை மாநிலமான கேரளாவில் கம்யூனிஸ்டு கட்சியின் ஆட்சி நடைபெற்று வருகிறது.  பினராயி விஜயன் தலைமையில்  மார்க்சிஸ்ட் கம்யூனிஸ்ட் கட்சி தலைமையிலான இடதுசாரி ஜனநாயக முன்னணி ஆட்சி நடைபெற்று வருகிறது. அவரது  அமைச்சரவையில் கூட்டணி கட்சியை சேர்ந்த  மேத்யூ டி தாமஸ் நீர்வளத்துறை அமைச்சராக பதவி வகித்து வந்தார்.

அவர் பதவி ஏற்று  இரண்டரை ஆண்டுகள் முடிவடைந்த  நிலையில், மீதமுள்ள இரண்டரை ஆண்டு கால ஆட்சியை அவரது கட்சியை சேர்ந்த கிருஷ்ணகுட்டி எம்எல்ஏவுக்கு வழங்க மத சார்பற்ற ஜனதாதளம் உயர்மட்ட கூட்டத்தில் முடிவு எடுக்கப்பட்டதாக தெரிகிறது.

இதையடுத்து, மேத்யூ டதாமஸ் இன்று தன் பதவியை ராஜினாமா செய்தார். திருவனந்தபுரத்தில் முதல்வர் பினராயி விஜயனை சந்தித்து ராஜினாமா கடிதம் கொடுத்தார்.

பின்னர் செய்தியாளர்களை சந்தித்த தாமஸ், கட்சி தலைமை எடுத்த முடிவிற்கு கட்டுப்பட்டு பதவியை ராஜினாமா செய்ததாக கூறினார்.

மேத்யூ தாமசுக்கு பதிலாக  மதச்சார்பற்ற ஜனதா தளம் கட்சியின் மாநில தலைவரும் பாலக்காடு சித்தூர் தொகுதி எம்எல்ஏவுமான கிருஷ்ணன்குட்டி, பினராயி விஜயன் அமைச்சரவையில் இடம்பெறுவார் என அறிவிக்கப்பட்டு உள்ளது.