மாணவர்களை ஆச்சரியமூட்டிய கேரளப் பள்ளிகள் – நெட்டிசன் தகவல்

பில்லிக்கோடு, கேரளா.

ஒரு கேரளா அரசுப்பள்ளியில் மாணவர்களை ஆச்சரியமூட்டும் வகையில் வண்ணம் அடிக்கப்பட்டூல்லதை நெட்டிசன் ஒருவர் தலவலில் தெரிவித்துள்ளார்.

பில்லிக்கோடு என்பது கேரள மாநிலம், காசரகோடு மாவட்டத்தை சேர்ந்த ஒரு ஊர்.

இங்குள்ள அரசுப்பள்ளியில், விடுமுறை முடிந்து வந்த மாணவர்களுக்கு மாபெரும் ஆச்சரியம் காத்திருந்தது.

ஆம்,  வகுப்பறைகள் ரெயில் பெட்டிப்போல் வண்ணம் அடிக்கப்பட்டது மாணவர்களுக்கு பெரும் மகிழ்ச்சியையும் உண்டாக்கியது.

முதலில் சுவர் வெள்ளை வண்ணத்தில் இருந்தது.

இப்போது நீல வண்ணம், அதுவும் ரெயில் பெட்டியின் உருவில், நுழைவாயில் கூட அச்சு அசலாக ரெயில் பெட்டியின் கதவு போலவே இருந்தது.

வகுப்பறையின் புதுமை எல்லா மாணவர்களையும் கவர்ந்து இழுத்தன.

நாமும் இந்த வகுப்பறையின் புகைப்படங்களை கண்டு ரசிப்போமே