கோழிக்கோடு:

கேரளாவில் என்பிஆர் ( National Population Register (NPR)  செயல்படுத்தாவிட்டால் ரேஷன் ரத்து செய்யப்படும் என்று பாஜக செய்தித் தொடர்பாளர் கோபாலகிருஷ்ணன் மாநில அரசுக்க மிரட்டல் விடுத்துள்ளார்.

அடுத்த ஆண்டு (2020) நாடு முழுவதும் தேசிய மக்கள் தொகை கணக்கெடுப்பு நடத்தப்பட உள்ளது. இந்த கணக்கெடுப்பில்,  குடிமக்களின் பிறந்த தேதி, திருமண நிலை, பிறந்த இடம் மற்றும் தேசியம், மொபைல் எண் உள்பட  பல்வேறு தரவுகள் கேட்கப்பட்ட உள்ளது. இதற்கு ஒரு தரப்பினர் கடும் எதிர்ப்பு தெரிவித்து வருகின்றனர்.

இந்த நிலையில், கேரள மாநில பாஜக மூத்த தலைவர் கோபாலகிருஷ்ணன் செய்தியாளர்களை சந்தித்தார். அப்போது, கேரளாவில் என்பிஆர் செயல்படுத்தப்பட வேண்டும் என்று மாநில அரசை வலியுறுத்தியவர், அதை செய்யாவிட்டால், மாநிலத்துக்கு வழங்கப்படும் ரேஷன் பொருட்கள் ரத்து செய்யப்படும் என்று கூறினார்.

மக்கள்தொகை கணக்கெடுப்பின்போது மக்களை பொய் சொல்லும்படி புக்கர் விருது பெற்ற அருந்ததி ராய் கூறியிருப்பதை விமர்சித்தவர், அவரை அரசியல் ‘மண்டாரா’ என்று அழைக்க வேண்டும் என்று கூறினார்.

தொடர்ந்து பேசியவர்,  வளைகுடா நாடுகளில் வாழும் சில இந்துக்கள் அச்சுறுத்தப்படுகிறார்கள். இந்துக்களை அச்சுறுத்துபவர்கள் பாகிஸ்தான் செல்ல வேண்டியிருக்கும் என்று எச்சரித்தவர்,   இயக்குனர் கமல் ஒரு தீவிரவாதி என்றும் அவர் குற்றம் சாட்டினார்,  சினிமா சகோதரத்துவத்தால் ஏற்பாடு செய்யப்பட்ட போராட்டத்தில் கண்ணியமான மக்கள் பங்கேற்க மாட்டார்கள் என்றும் தெரிவித்தார்.