தொற்றில்லா நோய் தடுப்பு பணிகளில் சிறந்த சேவை: கேரளாவுக்கு ஐநா விருது

திருவனந்தபுரம்: தொற்றில்லா நோய் தடுப்பு பணிகளில் சிறப்பாக  பங்காற்றியதாக கேரளாவுக்கு ஐ.நா. விருது வழங்கப்படுகிறது.

இந்த ஆண்டுக்கான ஐ.நா. விருது கேரளாவுக்கு வழங்கப்படுவதாக உலக சுகாதார அமைப்பின் தலைவர் டெட்ரோஸ் அதானம் அறிவித்துள்ளார். உலகம் முழுவதும் தேர்ந்தெடுக்கப்பட்ட 7 சுகாதார அமைச்சகங்களில் கேரளாவும் இடம்பெற்று உள்ளது.

நோய் கட்டுப்பாடு, சிகிச்சை, சேவை பணிகளில் சிறப்பாக பங்காற்றியதற்காக அங்கீகாரம் அளிக்கும் வகையில், கேரளாவுக்கு இந்த விருது அளிக்கப்படுகிறது.

கேரளா சுகாதார அமைச்சகம் தவிர ரஷ்யா, பிரிட்டன், மெக்சிகோ, நைஜீரியா, அர்மேனியா போன்ற நாடுகளும் இந்த விருதுக்கு தேர்வு பெற்றுள்ளது.

விருது அறிவிப்பு குறித்து கேரள சுகாதார அமைச்சர் சைலஜா கூறி இருப்பதாவது: கொரோனா காலங்களில் இறப்பு விகிதங்களை கட்டுப்படுத்தி இருக்கிறோம்.  எங்கள் துறையின் ஓய்வில்லாத சேவைக்கு அங்கீகாரம் தரும் விதமாக விருது கிடைத்துள்ளது என கூறியுள்ளார்.