கணவன் முகத்தில் ஆசிட் ஊற்றி கொன்ற கேரளப் பெண்

லப்புரம் கேரளா

கேரளாவின் மலப்புரம் மாவட்டத்தில் உள்ள பொத்தன் சேரியை சேர்ந்தவர் சுபைதா.  இவர் கணவர் பஷீர்.   இரண்டு வாரங்களுக்கு முன்பு நள்ளிரவில் இவர்கள் வீட்டுக்குள் மர்ம நபர் ஒருவர் பஷீரின் முகத்தில் ஆசிட் ஊற்றி விட்டு ஓடி விட்டதாக சுபைதா கூச்சல் இட்டுள்ளார்.   ஆசிட் வீச்சில் பஷீரின் முகம் சிதைந்தது.,

அருகில் உள்ள தனியார் மருத்துவமனையில் முதலுதவி அளிக்கப்பட்ட பின் பஷீர் கோழிக்கோடு அரசு மருத்துவமனையில் சேர்க்கப்பட்டார்.  அங்கு அவருக்கு சிகிச்சை அளிக்கப்பட்டது.   ஆயினும் அவர் கடந்த 21ஆம் தேதி சிகிச்சை பலனின்றி மரணம் அடைந்தார்.  போலீசின் விசாரணையில் பஷீர் வீட்டுக்கு சம்பவ தினத்தன்று யாரும் வரவில்லை என தெரிய வந்தது.

சுபைதாவிடம் திவிர விசாரணை நடத்தியதில் சுபைதா தானே கணவர் மீது ஆசிட் வீசியதாக ஒப்புக் கொண்டார்.   அவர், “பல பெண்களுடன் என் கணவர் தொடர்பு வைத்திருந்தார்.  அதை நான் கண்ட்டித்தும் அவர் கேட்கவில்லை. அவர் அழகினால் தான் பெண்களை அவர் மயக்குகிறார் என நான் எண்ணினேன்.  அதனால் நான் அவர் முக அழகை அழிக்க ஆசிட் ஊற்றினேன்.  அவர் சாக வேண்டும் என நான் நினைக்கவில்லை” எனக் கூறி உள்ளார்.

சுபைதாவை காவல் துறையினர் கைது செய்துள்ளனர்.   மேலும் இந்த சம்பவத்தில் வேறு யாரும் சுபைதாவுக்கு உதவினார்களா என்னும் கோணத்தில் விசாரணை நடந்து வருகிறது.