எர்ணாகுளம்:

கேரளா மாநிலம் எர்ணாகுளம் வாரபுழா பகுதியை சேர்ந்தவர் சாதி (வயது 75). இவர் பழைய ரூ. 500, ஆயிரம் ரூபாய் நோட்டுக்களில் ரூ. 4 லட்சம வரை வைத்திருந்தார். கடந்த செப்டம்பர் மாதம் அறிவி க்கப்பட்ட பணமதிப்பிழப்பு அறிவிப்பு குறித்து இவருக்கு தெரியவில்லை.

கடந்த ஜனவரி மாதம் தான் இந்த தகவல் சாதிக்கு தெரியவந்துள்ளது. அதனால் இந்த பணத்தை மாற்ற அவர் முயற்சித்தார். ஆனால் முடியாமல் போனது. இவர் தற்போது இறந்துவிட்டார். அவரது இறுதி மூச்சு இருந்த வரை பணத்தை மாற்ற அவர் போராடி தோல்வி அடைந்தார்.

அவருக்கு உதவி செய்ய போலீசாரும், வராப்புழா பஞ்சாயத்து உறுப்பினர்களும் முயற்சி செய்தனர். ஆனால், பழைய ரூபாய் நோட்டுக்களை மாற்றுவதற்கான கால அவகாசம் முடிந்துவிட்டதால் அதை மாற்ற முடியாமல் போனது.

இது குறித்து பஞ்சாயத்து உறுப்பினர் பாலி என்பவர் கூறுகையில்,‘‘இதற்காக நாங்கள் ஒரு நடவடிக்கை குழு அமைத்து சாதியை அழைத்துக் கொண்டு தேவையான ஆவணங்களுடன் சென்னைக்கு பணத்தை மாற்றுவதற்காக சென்றோம். கால அவகாசம் முடிந்துவிட்டதால் அமைச்சகத்தில் இருந்து உத்தரவு வந்தால் தான் மாற்ற முடியும் என்று தெரிவித்துவிட்டனர்.

அமைச்சகத்தை நேரில் அணுகி மனு கொடுத்தோம். ஆனால் எதுவும் நடக்கவில்லை. சாதி இருதயம் மற்றும் கிட்னி நோயால் பாதிக்கப்பட்டு எர்ணாகுளம் அரசு மருத்துவமனையில் சிகிச்சை பெற்று வந்தார். அவரது உடல்நிலை மிகவும் மோசமடைந்துவிட்டதால் அவரை வீட்டுக்கு அழைத்து செல்ல மருத்துவமனை நிர்வாகம் தெரிவித்துவிட்டது. வீட்டில் அவர் நேற்று இறந்துவிட்டார்’’ என்றார்.

கேரள அரசின் கால்நடை துறையில் பணியாற்றிய சாதி கடந்த 20 ஆண்டுகளுக்கு முன் ஓய்வு பெற்றார். சிறிய வீட்டில் அவர் தனியாக வசித்து வந்தார். அவருக்கு வெளியுலகத்தோடு தொடர்பு இல்லை. அவருக்கு பணமதிப்பிழப்பு குறித்த அறிவிப்பு தெரியவில்லை. கடந்த ஜனவரி முதல் வாரத்தில் அங்குள்ள கடைக்கு பொருட்கள் வாங்க சென்றார். அப்போது தான் ஆயிரம் ரூபாய் நோட்டுக்கள் செல்லாது என்பதை அறி ந்துள்ளார்.

இதையடுத்து உடனடியாக ரூ. 4 லட்சத்தை எடுத்துக் கொண்டு அருகில் உள்ள வங்கிக்கு சென்றார். ஆனால் கால அவகாசம் முடிந்துவிட்டதால் அதை மாற்ற இயலாது என்று தெரிவித்துவிட்டனர். இந்த பணம் அவர் ஓய்வுபெற்ற போது பெற்றதாகும்.

இந்த பணம் இல்லாமல் ரூ. 10 லட்சத்தை அவர் வங்கியில் டெபாசிட் செய்திருந்தது பின்னர் தெரியவ ந்தது. இதன் பின்னர் அவரது வீட்டில் போலீசாரும், பஞ்சாயத்து உறுப்பினர்களும் சோதனை நடத்தி இந்த பணத்தை பறிமுதல் செய்தனர். பணத்தை மாற்ற உதவி செய்வதாக கூறிய அவர்கள் பின்னர் பணத்தை பறிமுதல் செய்துவிட்டனர்.

‘‘ பணத்தை யாரும் எடுத்துக் கொள்வார்களோ? என்று அச்சத்திலேயே இருந்தேன். சிறு வயதிலேயே கணவர் இறந்துவிட்டார். ஒரு மகள் இருந்தார். அவருக்காக தான் எல்லாத்தையும் சேர்த்து வைத்தேன். மகளும் கடந்த ஒரு ஆண்டுக்கு முன் இறந்துவிட்டார். தனி ஆளாக தான் அனைத்தையும் நிர்வகித்து வ ந்தேன். என்னை ஏமாற்றுவதற்காகவே மக்கள் பலர் என்னை தேடி வந்தனர்’’ என்று சாதி கடந்த ஜனவரி மாதம் ‘தி நியூஸ் மினிட்’ செய்தி நிறுவனத்திடம் தெரிவித்திருந்தார்.