Random image

கணவரின் உயிரணுக்களால் ஓராண்டுக்கு பிறகு இரட்டைகுழந்தை பெற்ற கேரள இளம்பெண்

கண்ணூர்:

றந்த கணவரின் உயிரிணுக்களை சேமித்து வைத்ததால், அதன்மூலம்  செயற்கை கருவூட்டல் மூலம் ஓராண்டுக்கு பிறகு குழந்தை பெற்றுள்ளார் கேரள மாநிலத்தை சேர்ந்த இளம் பெண் ஒருவர். இதல் வியப்புக்குரிய செயல் என்னவென்றால், அவருக்கு இரட்டை குழந்தை பிறந்துள்ளது.

கேரள மாநிலம் கண்ணூர் பகுதியே சேர்ந்த தம்பதியினரான சுதாகரன், ஷில்னாவுக்கு கடந்த 2016ம் ஆண்டு வெகு சிறப்பாக திருமணம் நடைபெற்றது. சுதாகரன கேரளாவில் ஒரு கல்லூரியில் துணைபேராசிரியராக பணி புரிந்து வந்தார். ஷில்பாக தனியார் வங்கி ஒன்றில் பணியாற்றி வந்தார். திருமணமாகி ஒரு ஆண்டே ஆன நிலையில் அவர்கள் இருவரும் குழந்தை பிறப்பை தள்ளிவைத்து வாழ்க்கையை இன்பமயமாக கொண்டாடி வந்தனர்.

இந்த நிலையில் கல்லூரி சுற்றுலாவின் போது சுதாகாரன் சக ஆசிரியர்களுடன் சுற்றுலா சென்றிருந்தார். அப்போது வீட்டில் இருந்த ஷில்பாவுக்கு உடல்நலம் இல்லை என்று தகவல் வந்தததும், சுதாகரன் மட்டும் சுற்றுலாவில் இருந்து தனியாக கண்ணூருக்கு திரும்ப முடிவு செய்து,  சுற்றுலா சென்ற வாகனத்தை விட்டு கீழே இறங்கி பேருந்தில் ஏறுவதற்காக சாலையைக் கடந்தபோது, விபத்தில் சிக்கினார்.

இதையடுத்து அவர் உயிர் பிழைக்க மாட்டார் என்ற நிலையில், அவர்மூலம் குழந்தை பெற விரும்பிய அவரது மனைவி ஷில்பா, அவரது உயிரணுக்களை எடுத்து சேமித்து வைக்க ஏற்பாடு செய்தார். இதையடுத்து, தனது கணவரின் உயிரணுக்கள் மூலம் செயற்கை கருவூட்டல் மூல்ம்  ஷில்னா கர்ப்பமானார்.

இந்த நிலையில், பிரசவம் காரணமாக   கண்ணூர் மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்ட  ஷில்பாவுக்கு அறுவை சிகிச்சைமூலம் இரட்டைப் பெண் குழந்தைகளை பிறந்தது. இதனால், ஷில்னா மற்றும் உறவினர்கள் மகிழ்ச்சியில் உள்ளனர்.