மோடியை கொலை செய்ய ‘வாட்ஸ் அப்’ல் அழைப்பு…கேரளா வாலிபர் கைது

திருவனந்தபுரம்:

பிரதமர் மோடியை கொல்ல வேண்டும் என வாட்ஸ்- ஆப்பில் அழைப்பு விடுத்த வாலிபரை கேரள போலீசார் கைது செய்துள்ளனர்.

அவர் கேரளா மாநிலம் கோழிக்கோடு மாவட்டம் புருமன்னா பகுதியை சேர்ந்த சாகுல் ஹமீது (வயது 19) என்பது தெரியவந்துள்ளது.

கடந்த 22ம் தேதியிட்ட ஒரு பதிவில் பிரதமர் மோடியின் புகைப்படத்துடன் அவரை கொலை செய்ய வேண்டும் என்று அழைப்பு விடுத்திருந்தார். இது குறித்து போலீசார் விசாரணை மேற்கொண்டுள்ளனர்.