புதுடெல்லி: கேரளாவின் பருவமழை காலம் வருகின்ற ஜுன் 6ம் தேதி துவங்குவதாக இந்திய வானிலை ஆராய்ச்சி மையம் கூறியுள்ளது. வழக்கமாக துவங்கும் தேதியைவிட, இது 5 நாட்கள் தாமதம் என்று தகவல்கள் கூறுகின்றன.

“இந்த ஆண்டு, கேரளாவின் பருவமழை காலம் சற்றே தாமதமாக துவங்கும். தென்மேற்கு பருவக்காற்று காலம் வரும் ஜுன் 6ம் தேதி துவங்கும் என்று எதிர்பார்க்கப்படுகிறது. அதாவது, 4 நாட்கள் முன்பின்னாக இருக்கலாம்” என்று வானிலை ஆராய்ச்சி நிலையத்தின் சார்பாக தெரிவிக்கப்பட்டுள்ளது.

வழக்கமாக, கேரளாவில் ஜுன் 1ம் தேதியே தென்மேற்கு பருவமழை துவங்கிவிடும். இந்தப் பருவத்தில் 4 மாதங்கள் வரை மழை பெய்யும்.

அந்தமான் மற்றும் நிகோபர் தீவுகளின் தென்பகுதி மற்றும் வங்கக் கடலின் தென்கிழக்கு பகுதி ஆகியவற்றில் நிலவும் சூழல், மே மாதம் 18 – 19 தேதிகளின் காலகட்டத்தில், தென்மேற்கு பருவ மழைக்கு சாதகமாய் உள்ளதாக தொடர்புடைய தகவல்கள் கூறுகின்றன.

அதன்படி, வரும் ஜுன் 4ம் தேதி, தென்மேற்கு பருவக்காற்று, கேரளாவின் கடற்கரையை அடையும் என தனியார் வானிலை ஆராய்ச்சி அமைப்பு ஒன்று தெரிவித்துள்ளது.