திருவனந்தபுரம்: பத்மநாபசுவாமி கோயில் அர்ச்சகர்கள் 10 பேருக்கு கொரோனா உறுதி செய்யப்பட்டதால் கோயில் மூடப்பட்டது.

 
கேரளாவில் உள்ள புகழ்பெற்ற பத்மநாபசுவாமி கோயிலின் அர்ச்சகர்கள் 10 பேருக்கும், ஊழியர்கள் இருவருக்கும் கொரோனா இருப்பது உறுதி செய்யப்பட்டு உள்ளது. இதையடுத்து முன்னெச்சரிக்கை நடவடிக்கையாக, கோயில் வரும் 15ம் தேதி வரை மூடப்பட்டது.
நாள்தோறும் பூஜைகள் நடக்கும் என்றும், பொதுமக்கள் தரிசனத்துக்கு அனுமதிக்கப்பட மாட்டார்கள் என்றும் கோயில் நிர்வாகம் தெரிவித்துள்ளது. கொரோனா லாக்டவுன் காரணமாக மூடப்பட்ட கோயில், ஆகஸ்ட் 27ம் தேதிதான் திறக்கப்பட்டது.
நாள் ஒன்றுக்கு 665 பக்தர்களுக்கு மட்டுமே அனுமதி தரப்பட்டது. அதுவும் ஒரே நேரத்தில் 35 பக்தர்கள் மட்டுமே கோயிலுக்குள் செல்லலாம் என்று அறிவிக்கப்பட்டது. கட்டுப்பாடுகள் பல விதித்தாலும், அர்ச்சகர்களுக்கு கொரோனா உறுதியானதால் கோயில் மூடப்பட்டது.