கேரள காங்கிரஸ் எம் பி சென்னையில் மரணம்

சென்னை

கேரள மாநிலம் வயநாடு தொகுதியின் காங்கிரஸ் பாராளுமன்ற உறுப்பினர் ஷா நவாஸ் மரணம் அடைந்துளர்.

கேரளாவில் உள்ளது வயநாடு பாராளுமன்ற தொகுதி இந்த தொகுதியின் பாராளுமன்ற உறுப்பினராக உள்ளவர் ஷா நவாஸ். இவர் தொடர்ந்து இந்த தொகுதியில் இருமுறை தேர்ந்தெடுக்கப்பட்டுள்ளார். இவர் கடந்த 2009 ஆம் ஆண்டு தேர்தலில் கேரளாவில் அதிக வாக்கு வித்யாசத்தில் வெற்றி பெற்றவர் ஆவார்.

சுமார் 67 வயதான ஷா நவாஸ் உடல்நலக் குறைவால் சென்னையில் உள்ள தனியார் மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டார். அங்கு அவருக்கு சிகிச்சை அளிக்கப்பட்டு வந்தது. சிகிச்சை பலனின்றி ஷா நவாஸ் மரணம் அடைந்துள்ளார்.

ஷா நவாசின் மரணம் அரசியல் உலகில் அதிர்சீயை உண்டாக்கி இருக்கிறது.