சபரிமலை விவகாரம்: நிலக்கல் பகுதியில் காங்கிரசார் அமைதி வழி போராட்டம்

நிலக்கல்:

ச்சநீதி மன்ற உத்தரவு காரணமாக பரிமலைக்கு  10வயது முதல் 50 வயது வரை உள்ள பெண்கள்  செல்ல முயன்று வரும் நிலையில், அவர்களை போராட்டக்கார்கள் தடுத்து வருகின்றனர்.

இந்த பரபரப்பான சூழ்நிலையில், பிரச்சினைக்குறிய நிலக்கல் பகுதியில் கேரள மாநில காங்கிரஸ் சார்பில் அமைதி போராட்டம் நடைபெற்று வருகிறது.

சபரிமலையில் அனைத்து வயது பெண்களையும் அனுமதித்த உச்சநீதி மன்ற தீர்ப்பை எதிர்த்தும், மாநில அரசின் நடவடிக்கையையும் எதிர்த்தும்,  கேரள மாநிலம் நிலக்கல்லில் காங்கிரஸ் கட்சியினர் அறவழிப் போராட்டம் நடத்தி வருகின்றனர்.

ஐப்பசி மாத பூஜைக்காக அய்யப்பன் கோவில் நடை இன்று திறக்கப்பட உள்ள நிலையில்,  நாடு முழுவதும் இருந்து அய்யப்ப பக்தர்கள் சபரிமலை நோக்கி பயணமாகி வருகிறார்கள். அதே நேரத்தில்  இளம்வயது பெண்களும் கோவிலுக்கு வரும் முயற்சியில் ஈடுபட்டு வருகின்றனர். இதன் காரணமாக பரபரப்பு நிலவி வருகிறது.

உச்சநீதி மன்ற தீர்ப்புக்கு எதிராக போர்க்கொடி தூக்கி உள்ள பந்தள அரச குடும்பத்தினரும், அய்யப்பன் கோவில் தந்திரிகளும், இளம்பெண்கள் கோவிலுக்கு வர அனுமதிக்க முடியாது, அவர்களை பக்தர்கள் தடுத்து நிறுத்துவார்கள் என்று எச்சரிக்கை விடுத்துள்ளனர்.

இருந்தாலும் எச்சரிக்கையும் மீறி சில பெண்கள் பரிமலை நோக்கி பயணமான சில பெண்கள் பேராட்டக்கார்களால் தடுத்து நிறுத்தப்பட்டு, திருப்பி அனுப்பப்பட்டுள்ள நிலையில் நிலக்கல் மற்றும் பம்பை பகுதியில் பரபரப்பு நிலவி வருகிறது.

இந்த நிலையில் மாநில காங்கிரஸ் கட்சியை சேர்ந்தவர்கள் அமைதி வழி போராட்டம் நடத்தி வருகின்றனர்.